சின்னமனூர் கிணற்றில் மின்கம்பிகள் செய்த மாயம்.. தேனியில் 9 முறை! எடப்பாடி தோட்டத்திலும் இதே கதைதான்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்துக்காக அமைக்கப்பட்ட உறைகிணறுகளில் பொருத்தப்பட்ட மின்கம்பிகளை காணவில்லை.. யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள்.. ஆனால் இப்படி திருடு போவது ஒருமுறை, 2 முறை அல்ல.. இதுவரை 9 முறை திருடப்பட்டுள்ளன.. ஒவ்வொரு முறையும் புகார் கொடுத்தும் திருடர்கள் சிக்காததால், பொதுமக்கள் இப்போது அதிருப்தியில் உள்ளனர்.. என்ன நடக்கிறது தேனி சின்னமனூர் அருகில்?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை பேரூராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்..

Theni electric wire Edappadi Palaniswami

தேனி மாவட்டம் சின்னமனூர்

இவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் எல்லப்பட்டியில் உள்ள பெரியாற்றில், மெகா தடுப்பணை அருகே உறைகிணறு அமைக்கப்பட்டுள்ளது.. இதன் எதிர்ப்பகுதியில் பம்பிங் ஸ்டேஷனும் உள்ளது..

ஆனால், இந்த உறைகிணற்றில் சேகரமாகும் தண்ணீர் மட்டும் பொதுமக்களின் தேவைக்குப் போதுமானதாக இல்லை.. இதனால் சின்னமனூர் சாலைப் பகுதியில் உள்ள பெரியாற்றுக்குள் மற்றொரு உறைகிணறு அமைக்கப்பட்டது.. இப்படி 2 இடங்களில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது..

உயர்தர மின்கம்பிகள்

இந்தக் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்து விநியோகிக்க, மின் மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.. இதற்காக குழாய்களுடன் இணைக்கப்பட்ட உயர்தர மின்கம்பிகளும் பொருத்தப்பட்டுள்ளன.. ஆனால், இந்த மின்கம்பிகளை மர்ம நபர்கள் அடிக்கடி வெட்டி எடுத்துச் செல்வதுதான் பிரச்சனையாக மாறியுள்ளது..

மின்கம்பிகள் திருடப்பட்டதும் மோட்டார்களை இயக்க முடியாமல் போகிறது.. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுகிறது.. பிறகு பேரூராட்சி நிர்வாகம் புதிய மின்கம்பிகளைப் பொருத்துகிறது.. மீண்டும் சில நாட்களில் அதே திருட்டு நடப்பதாகப் புகார் எழுந்துள்ளது..

9 முறை மின்கம்பிகள் திருட்டு

இதுவரை 9 முறை மின்கம்பிகள் திருடப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு முறையும் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதும் தொடர்கிறது.. ஆனாலும், திருட்டில் ஈடுபட்டவர்கள் இதுவரை சிக்கவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

தமிழகத்தில் விவசாயக் கிணறுகள், குடிநீர் கிணறுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பிகள் திருடப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.. மின்கம்பிகளை வெட்டி எடுத்துச் செல்வதால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்படுவதுடன், மீண்டும் மீண்டும் புதிதாக கம்பிகளைப் பொருத்த வேண்டிய நிலையும் ஏற்படுகிறது..

எடப்பாடி பழனிசாமி தோட்டம்

சமீபத்தில்கூட சேலம் சிலுவம்பாளையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர் கோவிந்தராஜனுக்குச் சொந்தமான சுமார் 7 ஏக்கர் தோட்டத்திலுள்ள ஆழ்துளைக் கிணற்றில் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட மின்மோட்டாரின் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்று விட்டனர்..

இந்த சம்பவத்தை தமிழக சட்டப்பேரவையிலேயே சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி, தனது தோட்டத்திலேயே மின்வயர்கள் திருடப்பட்டுள்ளதாகக் கூறி, தனக்கே இப்படியொரு நிலை என்றால் பொதுமக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.. இதுதொடர்பாக எடப்பாடியின் சகோதரர் போலீசில் புகார் அளிக்கவும், இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்..

ஆனாலும் குடிநீர் விநியோகத்துக்காக அமைக்கப்பட்ட மின்கம்பிகளே மீண்டும் மீண்டும் திருடப்படுவது பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.. இந்தத் திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+