பிஞ்சுல பழுத்ததை நானும் சொல்லட்டுமா.. என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் கூடாது.. இளங்கோவன் எச்சரிக்கை
ஓபி ரவீந்திரநாத் பேச்சுக்கு முக ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளனர்
Recommended Video

தேனி: "பிஞ்சிலே பழுத்ததை பற்றி நானும் சொல்வேன்.. வெளிநாட்டு சமாச்சாரமும் எனக்கு தெரியும், சினிமா தொடர்புகளும் எனக்கு தெரியும்.. அதனால என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வேணாம்" என்று ஓபிஎஸ் மகனுக்கு திமுக கூட்டணி ஒரு அலர்ட் தந்துள்ளது.
தேனியில் துணை முதல்வர் மகன் ரவீந்திரநாத் வேட்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தனிப்பட்ட முறையில் என்ன சாதனை செய்தார், என்ன மாதிரியான களப்பணியில் ஈடுபட்டார் என்ற விவரம் எல்லாம் நமக்கு முழுதாக தெரியவில்லை. ஆனால் ஓபிஎஸ் மகன் என்ற அடையாளத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது மட்டும் பொதுவான பார்வை.
சின்ன வயசு என்று சொல்வதா.. அல்லது அரசியல் அனுபவம் இல்லை என்று சொல்வதா என தெரியவில்லை.. பிரச்சாரத்தின் போதெல்லாம் பக்குவம் இல்லாமல் தாறுமாறாக பேசி வருகிறார் ரவீந்திரநாத் என்று சொல்லப்பட்டது. அதுவும், காங்கிரஸ் தலைவரை டெபாசிட் இல்லாமல் தோற்கடிக்க செய்வேன், வெளியூர்க்காரர் என்றெல்லாம் ஈவிகேஎஸ் பற்றி பேசியிருக்கிறார் போலும்!

எமோஷனல்
இதனால் திமுக - காங்கிரஸ் செம கடுப்பாகி இருக்கிறார்கள். பெரியகுளத்தில் ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு வந்தபோது, ரவீந்திரநாத் பேசியதற்கெல்லாம் சேர்த்து வைத்து பதிலடி தந்திருக்கிறார்கள். அதிலும் ஈவிகேஎஸ் ரொம்பவே எமோஷனல் ஆகிவிட்டாராம்.

எச்சரிக்கை
அப்போது பேசியபோது,"பிஞ்சிலே பழுத்ததை பற்றி நானும் சொல்வேன்.. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் சமாச்சாரமும் எனக்கு தெரியும், சினிமா தொடர்புகளும் எனக்கு தெரியும்.. அதனால என்கிட்ட இந்த விளையாட்டெல்லாம் வேணாம்" என்று எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசி இருக்கிறார்.

ஓபனாக சொல்ல முடியாது
அதேபோல திமுக தலைவர் ஸ்டாலினும், "ஓபிஎஸ் மகன் என்ற தகுதியை தவிர வேற சில மறைமுகத் தகுதிகள் இருக்கலாம். ஆனால் அதையெல்லாம் மேடையில் ஓபனாக சொல்ல முடியாது" என்று நாகரீகமாகவும், நாசூக்காகவும் சொல்லிவிட்டு போனாராம்!

கடிவாளம்
இப்படி கூட்டணி கட்சி தலைவர்கள் ரவீந்திரநாத் பற்றி பேசிவிட்டு போனதற்கு தேனி அதிமுக தரப்பு ஆடிப்போய் விட்டதாம்! "கெத்தாக வலம் வரும் மகனுக்கு அரசியல் நாகரீகம் சொல்லி கொடுத்து இருக்க வேண்டும்.. பொது இடங்களில் எப்படி பேசுவது என்றும் கடிவாளம் இட்டிருந்தால் இப்படி உள்ளூரிலேயே அசிங்கப்பட்டிருக்க தேவையில்லை" என்று அதிமுகவின் ஒரு தரப்பே முணுமுணுக்கிறதாம்!

பாடம் எடுக்கணும்
இதேபோலத்தான் விஜயகாந்த் மகனும் தாறுமாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மகன்களை உட்கார வைத்து அப்பாக்கள் பாடம் எடுத்தால் நல்லதுதான்.
-
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
திமுக தோல்விக்கு காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்.. கமெண்ட் செய்யுங்க -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications