தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஓபிஎஸ்-தங்கம் இடையே கடும் போட்டி.. தேனி மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் என்ன நடக்கிறது?

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த முறை அதிமுக நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை ஆண்டிபட்டி மற்றும் போடியில் முன்னிலை வகிக்கிறது, போடியில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தங்கதமிழ்செல்வன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Recommended Video

    #BREAKING #TNElectionResults2021 போடி: ஓ.பி.எஸ் முன்னிலை!

    தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 140க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவின் கோட்டையான தேனி மாவட்டத்தில் இந்த முறை திமுக கடும் போட்டியை அளித்து வருகிறது.

     பெரும்பாலான தொகுதிகளில் '3வது' இடம் .. நாம் தமிழர் கட்சி 'அதகளம்' பெரும்பாலான தொகுதிகளில் '3வது' இடம் .. நாம் தமிழர் கட்சி 'அதகளம்'

    போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் 10411 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுகவின் தங்கதமிழ்செல்வன் 10061 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.

    350 வாக்குகன் அதிகம்

    350 வாக்குகன் அதிகம்

    தங்கத்தைவிட ஓபிஎஸ் 350 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். நாம் தமிழர் கட்சியின் பிரேம் சந்திர் 1135 வாக்குகள் பெற்று 3வது இடத்தை பிடித்துள்ளார். அமமுக வேட்பாளர் முத்துசாமி 553 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கணேஷ்குமார் 204 வாக்குகள் பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளார்.

    திமுக முன்னிலை

    திமுக முன்னிலை

    கம்பம் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 3104 வாக்குகள் பெற்று முன்னியில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சையது கான் 2212 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் அனிஷா பாத்திமா 596 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் சுரேஷ் 489 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.

    திமுக சரவணக்குமார்

    திமுக சரவணக்குமார்

    பெரியகுளம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் சரவணக்குமார் 15132 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் முருகன் 9876 வாக்குகள் பெற்று 2வது இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் கதிர்காமு 3123 வாக்குகள் பெற்று 3வது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் விமலா 1645 வாக்குகள் பெற்று 4வது இடத்தை பிடித்துள்ளார்.

    அதிமுக லோகிராஜன்

    அதிமுக லோகிராஜன்

    ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் லோகிராஜன் 11371 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் மகாராஜன் 9804 வாக்குகள் பெற்று 2வது இடம் வகிக்கிறார். அமமுக வேட்பாளர் ஆர். ஜெயகுமார் 1228 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும், நாம் தமிழர் வேட்பாளர் ஜெயக்குமார் 1099 வாக்குகள் பெற்று 4வது இடத்தையும் பிடித்துள்ளது. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் குணசேகரன் 334 வாக்குகள் பெற்று 5வது இடத்தை பிடித்துள்ளது.

    English summary
    DMK and AIADMK are leading in 2 places each in Theni district. Fierce competition between OPS-thanga tamil selvan in bodi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X