தேனி பால் பண்ணையில் FSSAI அதிகாரிகள் ஆய்வா? ஆவின் நிறுவனம் பரபரப்பு விளக்கம்
தேனி: தேனியில் உள்ள ஆவின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக பரவும் தகவல் உண்மையில்லை என்றும், ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
தேனியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாக தகவல் பரவிய நிலையில், ஆவின் நிறுவனம் இந்த தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இது தொடர்பாக ஆவின் நிறுவனம் கூறுகையில், "ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா இனி நிரந்தரம்.. ஆனாலும் அடுத்த மாதமே நடக்கும் நல்ல விஷயம்
FSSAI அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் தேனி மாவட்ட பால் பண்ணையை ஆய்வு செய்து சில அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டது. அதை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டு பதில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதற்கு பின்பு எந்த ஆய்வுக்கும் FSSAI அதிகாரிகள் தேனி பால்பண்ணைக்கு வரவில்லை. தற்பொழுது வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தேனி ஆவினில் பால்கோவா மற்றும் பாதாம் பவுடர் மட்டுமே வாரத்தில் ஒரு நாள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு மற்றும் காரவகைகள் திண்டுக்கல் மற்றும் மதுரை ஆவினில் இருந்தே வருகிறது. தேனி ஆவினில் தீபாவளி இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுவதில்லை. ஆவினின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக சிலர் வேண்டுமென்றே பழைய செய்திகளை பரப்பி வருகின்றனர். தரமான பொருட்களை சரியான விலையில் வழங்குவதே ஆவினின் நோக்கம். இவ்வாறு ஆவின் விளக்கம் அளித்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications