ஆபாச வீடியோ.. பெண்களை மயக்கி.. மிரட்டி.. பணம் பறித்த கண்டக்டர் சத்யன்.. உள்ளே வைத்த போலீஸ்!
அரசு பஸ் கண்டக்டர் பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
தேனி: பெண்களிடம் நைசாக பேசி.. மயக்கி.. தனிமையில் நெருக்கி.. அதை வீடியோவாக எடுத்து மிரட்டி பணம் பறிப்பாராம் அரசு பஸ் கண்டக்டர் சத்யன்!
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்து வருபவர் சத்யன். வயசு 51 ஆகிறது. அரசு பஸ் கண்டக்டர் இவர்.
இவருக்கு எத்தனை ஆட்சி என்ற பெண்ணுடன் கல்யாணம் ஆனது. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார்.

பெண் குழந்தை
திரும்பவும் ஏஞ்சல் எஸ்தர் ராணி என்ற பெண்ணை 2-வது கல்யாணம் செய்துகொண்டார். அவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவரையும் டைவர்ஸ் செய்துவிட்டார். உண்மையை சொல்ல போனால், 2 பெண்களும் சத்யனை பிடிக்காமல்தான் போய்விட்டனர். மனைவிகள் இல்லாத நிலையில், இஷ்டத்துக்கு ஆட ஆரம்பித்தார் சத்யன்.

ஆபாச வீடியோ
பெரியகுளம் பக்கம் ஒரு பெண் வக்கீலுடன் நட்பாக பழகி, போட்டோவையும் வாங்கி அதை கன்னாபின்னாவென்று மார்பிங் செய்து, அதை வைத்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மிரட்டி வாங்கி உள்ளார். இப்படித்தான் ஒரு டீச்சரிடமும் நெருங்கி பேசி, அவர் போட்டோவையும் வாங்கி, மார்பிங் செய்து மிரட்டி, செக்ஸ் தொல்லை தந்துள்ளார்.

பிரச்சனைகள்
அது மட்டுமில்லை.. பஸ்ஸிலும் இவர் வேலையை காட்டுவார். பெரியகுளத்தில் இருந்து மதுரைதான் இவருடைய பஸ் ரூட். பஸ்ஸில் ஏறும் பெண்களை நோட்டம் போடுவார். அதிலும் ரெகுலராக வரும் பெண்களிடம் பேச ஆரம்பிப்பார். மதுரையில் அவர்கள் இறங்கியவுடன் கொஞ்ச நேரம் அவர்களின் குடும்ப பிரச்னைகளை கேட்பார்.

மயக்குவார்
சில பெண்கள் தாரை தாரையாக கண்ணீர் விட்டு, வீட்டு கஷ்டத்தை பிழிந்துவிட்டால், அவ்வளவுதான்.. சத்யனுக்கு குஷிதான்! ஆறுதல் சொல்வதாக நைசாக பேசுவார்.. மயக்குவார்.. சம்பந்தப்பட்ட பெண்களை தன் வீட்டிற்கே கூப்பிட்டு செல்வார்.. தனிமையில் நெருக்கமாக இருப்பார்.. அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொள்வார்.. பிறகு வீடியோவை காட்டி 1 லட்சம் குடு, 2 லட்சம் குடு என்று மிரட்டி பேரம் பேசுவார்.

கைது
வீடியோவை அழிக்க 5 லட்சம்கூட இவர் மிரட்டி வசூல் செய்திருக்கிறாராம். இதுவரைக்கும் சத்யனிடம் எல்லாவற்றையுமே இழந்த பெரியகுளத்தை சேர்ந்த 3 பெண்கள் சத்யன் மீது புகார் தந்துள்ளனர். அதனடிப்படையில் சத்யனை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications