கோவை சிறை கைதி எஸ்கேப்? இங்கி பிங்கி பாங்கினு உதயநிதி சொல்றாரு! ஆனா ஏடிஜிபி சங்கர் சொல்வதை பாருங்க

Subscribe to Oneindia Tamil

தேனி: கோவை சிறையில் இருந்து எந்த கைதியும் தப்பிச் செல்லவில்லை என சிறைத் துறை ஏடிஜிபி சங்கர் தெரிவித்துள்ளார். தேனி சிறையில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின் சிறை நுழைவு வாயில் முன் சிறைத்துறை தலைவர் ஏடிஜிபி சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் கூறும்போது, தேனி மாவட்ட சிறையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திருக்கிறோம்.

ADGP Shankar

தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் இதுபோன்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். எங்கெல்லாம் குறைபாடுகள் இருக்கிறதோ அவை எல்லாம் சரி செய்யப்படும்.

சிறையை முறையாக வழி நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 100% அமல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு அனைத்து உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தேனி சிறையில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து ஏற்கனவே கூறிவிட்டதால் அதை மீண்டும் கூற விரும்பவில்லை. குறைகளை நிவர்த்தி செய்ய அறிவுரைகள் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.

அவற்றையெல்லாம் பின்பற்றினால் இது போன்ற அசம்பாவிதங்கள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். கோவை சிறையில் இருந்து யாரும் தப்பிக்கவில்லை என ஏடிஜிபி சங்கர் தெரிவித்தார்.

சிறை கைதி தப்பித்தது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது: இந்த சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

அடுத்து பாளையம்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது. தோல்வி பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார்.

மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு என தெரிந்து கொண்டு சிறையில் இருந்து ஓட்டம் எடுக்கின்றனர். இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத் தானே தான் செய்துகொள்ள வேண்டும்.

'மெத்' அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறி ஆகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+