தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போடி தொகுதியில் பிரசாரத்தை துவங்கினார் ஓ.பன்னீர்செல்வம்... அரசின் திட்டங்களை பட்டியலிட்டார்!

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் போடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது தொகுதியில் இருந்து பிரசாரத்தை துவங்கினார்.

அப்போது பெண்கள், மாணவர்கள், ஏழை, எளிய மக்கள் என அனைவருக்கும் அதிமுக அரசு செய்த சாதனைகளை ஓ பன்னீர்செல்வம் பட்டியலிட்டார்.

அடிப்படை தேவைகள் அனைவருக்கும் கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

ஓ பன்னீர்செல்வம் பிரசாரம்

ஓ பன்னீர்செல்வம் பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 6-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் போடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது தேர்தல் பிரசசாரத்தை அரண்மனை புதூரில் தொடங்கினார் பிரச்சாரத்தின் போது அவர் கூறியதாவது:- நான் உங்களில் ஒருவனாக இருந்து தமிழக மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவேற்றுவேன். போடி தொகுதியில் பலம் பெறவும் உங்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நான் கடந்த 10 ஆண்டுகளாக நூத்துக்கு நூறு முழுமையாக செய்து முடித்து இருக்கிறேன்.

அனைத்து தரப்பினருக்கும் நன்மை

அனைத்து தரப்பினருக்கும் நன்மை

முல்லைப் பெரியாறு அணையின் 18 ஆம் கால்வாய் நீட்டிப்பு வேண்டி விவசாயிகளின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. போடி மக்களுக்கு அரசு பொறியியல் கல்லூரி வேண்டும் என்ற நிலையில் அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டு காலத்தில் அரசு சட்டக்கல்லூரி அரசு கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலையம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் அரசு கல்லூரிகளில் குறைந்த கட்டணம் வசூலிப்பதாக பெரும்பான்மையான மாணவர்கள் கல்வி கற்கும் நிலை உருவாகியுள்ளது இவை அம்மாவின் அரசு முழுமையாக நிறைவேற்றியுள்ளது.

ஏழை, எளியவர்களுக்கு வீடுகள்

ஏழை, எளியவர்களுக்கு வீடுகள்

ஏழை எளியோர் தமிழகம் முழுவதும் கண்டறியப்பட்டு சுமார் 12 லட்சம் பேருக்கு வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் கான்கிரீட் அமைக்கப்பட்ட தரமான வீடுகள் கட்டி முடிக்க நிர்ணயம் செய்யப்பட்டு அதில் 6 லட்சம் வீடுகள் முழுமையாக கட்டி தரப்பட்டுள்ளது இதில் தேனி மாவட்டத்தில் 2300 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது மேலும் கூடுதலாக 2004 வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போடி பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வளாகங்கள் சத்துணவுக் கூடங்கள் அனைத்து பகுதிகளிலும் சாலை வசதிகளும் சிறப்பாக அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளதாகவும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்துள்ளோம்.

பெண்களுக்கு திட்டங்கள்

பெண்களுக்கு திட்டங்கள்

மேலும் பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் அம்மாவின் ஆட்சி நிறைவேற்றியுள்ளது இதில் இரண்டு பெண் குழந்தை திட்டத்தின் கீழ் நிதி உதவி பெண்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் திருமண நிதி உதவி மற்றும் குழந்தை நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களை முழுமையாக அம்மாவின் அரசு நிறைவேற்றியுள்ளது கடந்த ஆட்சிக் காலங்களில் தாலிக்கு தங்கம் 4 கிராம் என்று இருந்த நிலையை மாற்றி வெற்றிகரமாகவும் பட்டதாரிகளுக்கு அந்த தொகை 50 ஆயிரமாக உயர்த்தி கொடுக்கப்பட்டது.

அதிமுக ஆட்சி வர வேண்டும்

அதிமுக ஆட்சி வர வேண்டும்

இதன் மூலம் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாகவும் தமிழகம் விளங்கி வருகிறது. மேலும் மாணவ மாணவியருக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் மடிக்கணினி வழங்கி இந்தியாவில் படித்த மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயரும் வகையில் அம்மாவின் அரசு செய்துள்ளது. இந்த அரசு மீண்டும் தொடர வேண்டும். பொது மக்களின் அடிப்படை தேவைகளும் அனைவருக்கும் கிடைக்க அம்மாவின் அரசு மீண்டும் அமைய இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

English summary
Tamil Nadu Deputy Chief Minister O Panneerselvam, who is contesting from Theni district's Bodi constituency, has started campaigning from his constituency
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X