எடப்பாடி இல்லை.. செங்கோட்டையனை முதல்வராகத்தான் ஸ்கெட்ச்.. சையது கான் பரபர தகவல்!
தேனி: அதிமுக இணைப்புக்கு ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்த எடப்பாடி பழனிசாமியை, ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஓபிஎஸ்-க்கு சாதகமாக வந்தது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனைத்தொடர்ந்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று அன்புச் சகோதரர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் ஓபிஎஸ் விடுத்த அழைப்பை எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நிராகரித்தார்.
அதிமுக பொதுக்குழு வழக்கு...எடப்பாடி பழனிசாமி அப்பீல்..ஹைகோர்ட்டில் ஓபிஎஸ் கேவியட் மனு

நிராகரித்த இபிஎஸ்
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில், எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்ற நோக்கில் அதிமுக இணைப்புக்கு அழைப்பு விடுப்பவர் தான் ஓ.பன்னீர் செல்வம். நானும் தன் மகனும் தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய மகன் எம்.பி. ஆகவும், மற்றொருவர் மத்திய அமைச்சராக வேண்டும். மற்றபடி ஓபிஎஸ்-க்கு வேறு யாரைப்பற்றியும் கவலையில்லை என்று கடுமையாக விமர்சித்தார்.

சையது கான் பேச்சு
இதனைத்தொடர்ந்து தேனி மாவட்டம் வந்த ஓ.பன்னீர் செல்வம், ஆதரவாளர்களை சந்தித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர் சையது கான் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுக ஒற்றுமையாக இருப்பது அதிமுகவுக்கு தான் நல்லது. ஆனால் எடப்பாடி பழனிசாமி கட்சி ஒன்றாக இணையக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

இபிஎஸ் மீது விமர்சனம்
எடப்பாடி பழனிசாமிக்கு தனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் ஒரே நோக்கம். அதிமுக தற்போதைய சூழலுக்கு, எடப்பாடி பழனிசாமியின் பதவி ஆசையும், பணத்தாசையும் தான் காரணம். அதிமுகவின் தேர்தல் தோல்விக்கும் அவர் தான் காரணம். அவருக்கு வேண்டியவர்களை மட்டுமே இபிஎஸ் வெற்றிபெற வைத்தார்.

யார் துரோகி?
அதிமுகவின் இணைப்புக்கு நாங்கள் எப்போதும் தயார். கடைசி வரை இரட்டைத் தலைமை தான் இருக்க வேண்டும். டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் ஓபிஎஸ் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். கூவத்தூரில் அனைவரும் முதலில் செங்கோட்டையனை தான் முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறினர்.
ஆனால் அதற்கு செங்கோட்டையன் ஒத்துக்கொள்ளவில்லை. இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகினார். எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக நியமித்தது சசிகலா தான். ஆனால் சசிகலா கட்சியை விட்டு நீக்கியவர் எடப்பாடி பழனிசாமி தான். இதில் யார் துரோகி என்பது அனைவருக்கும் தெரியும் என்று கடுமையாக விமர்சித்தார்.