"50 கிலோ"..தேர்தல் நாள் அதுவுமா.. தேனியில் என்னவெல்லாம் கொடுக்குறாங்க பாருங்க! பறக்கும் படை ஆக்சன்!
தேனி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுக்க தேர்தல் ஆணையம் சார்பாக போலீசார் மற்றும் அதிகாரிகள் குவிக்கப்பட்டு உள்ளனர். தேனியிலும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. காலை 7 மணியில் இருந்து வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது.
கொரோனா காலம் என்பதால் வாக்காளர்களுக்கு வெப்பநிலை சோதனை செய்யப்பட்டு, வாக்களித்த பின் சானிடைசர் கொடுக்கப்படுகிறது. எல்லா வாக்குச்சாவடியில் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

சிசிடிவி
இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையத்தின் மைக்ரோ அப்சர்வர் என்ற அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். பிரச்சனை ஏற்பட உள்ள வாக்குசாவடிகளில் இவர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு முழுக்க எல்லா வாக்குசாவடியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தலைநகரில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் மூலம் இந்த சிசிடிவி கேமரா காட்சிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு
அதேபோல் தேர்தல் நேரத்தில் பண, பொருள் விநியோகம் செய்யப்படுகிறதா என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள், போலீசார் சோதனை செய்து வருகின்றனர். இதற்காக 1 லட்சம் போலீசார், 10 ஆயிரத்திற்கும் அதிகமான நிர்வாகிகள், அதிகாரிகள் களமிறக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தேனியில் உத்தமபாளையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பதுக்கி வைக்கப்பட்டு இருந்த இறைச்சி பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இறைச்சி
வாக்காளர்களுக்கு லஞ்சமாக அரை கிலோ இறைச்சி வழங்கும் வகையில் பொட்டலம் பொட்டலமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. ஆளும் திமுக தரப்பினர் இப்படி இறைச்சியை பதுக்கி வைத்துள்ளதாக தேனி மாவட்ட அதிக புகார் வைத்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படையினர் உத்தமபாளையத்தில் இறைச்சி பதுக்கி வைக்கப்பட்டு இருந்த பகுதியில் ரெய்டு நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி தேர்தல் அதிகாரி மல்லிகாவிடம் அளிக்கப்பட்டது. இந்த இறைச்சியின் அளவு மொத்தம் 50 கிலோ இருக்கும் என்று கூறப்படுகிறது.
Recommended Video


என்ன பிளான்
உத்தமபாளையத்தில் உள்ள வார்டுகளில் இந்த இறைச்சியை மக்களுக்கு வீடு வீடாக விநியோகிக்க திமுக திட்டமிட்டு இருந்ததாக தேனி மாவட்ட அதிமுக புகார் வைத்துள்ளது. இதையடுத்தே பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்து இறைச்சிகளை பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.ஆனால் திமுக நிர்வாகிகள் யாரும் இறைச்சி விநியோகம் செய்யவில்லை, இதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் தேனி மாவட்ட திமுக தரப்பு விளக்கம் அளித்துள்ளது. சரியாக தேர்தல் நாள் அதிகாலையில் தேனியில் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications