Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனி அருகே மாட்டு வண்டியில் யார் பாருங்க.. ஜெ. பிறந்த நாளில் சிம்மனூரில் தூள் கிளப்புறாரே "வாரிசு"

Subscribe to Oneindia Tamil

தேனி: இரண்டு கைகளையும் தட்டினால் தான் ஓசை எழும், அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஆசை... இதை தான் ஓபிஸும் சொல்கிறார்... இதை புரிந்தவர்கள், புரிந்து நடந்தால் எல்லாருக்கும் நல்லது. புரியாமல் நடந்தால், தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் சேர்ந்து தக்க பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வருகிறார்கள்.. அதேபோல, அதிமுக தொண்டர்களும், ஜெயலலிதாவின் போட்டோவுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Theni bullock cart Ellai race Chinnamanur

அந்த வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு, முன்னாள் எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் சென்று, ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பிறகு ஓபிஆர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது சொன்னதாவது:

அதிமுகவின் பல்வேறு அவலங்கள்

"அனைத்து மாவட்ட இளைஞர்களையும் ஒருங்கிணைத்து மாற்றத்தை உருவாக்குவோம்... ஜெயலலிதாவின் லட்சியம் நிறைவேற அனைவருமே பாடுபட வேண்டும். ஜெயலலிதா நினைத்திருந்தால், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம். ஆனால், எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் உடல்நலம் சரியில்லாத நேரத்திலும்கூட, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆண்ட கட்சி மீண்டும் ஆளுகின்ற வாய்ப்பை உருவாக்கி தந்தார்..

ஜெயலலிதாவின் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என்பதற்காக தான் ஓபிஎஸ், 5 ஆண்டுகாலமாக பல்வேறு இன்னல்களை சந்தித்து ஆட்சியை நிறைவு செய்தார். ஆனால், அந்த நன்றியை அவர் எதிர்பார்க்க மாட்டார். இப்போது ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு பல்வேறு அவலங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. தொண்டர்களுடைய எழுச்சி ஒரு நாள் வெடிக்கும், அது புரட்சியாக மாறும். அன்று, ஜெயலலிதாவின் கனவு நனவாகும்.

பாடம் புகட்டுவார்கள்

அதிமுக தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி தர வேண்டும். 2 கைகளையும் தட்டினால் தான் சத்தம் கேட்கும்.. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் தமிழக மக்களின் ஆசை. இதை தான் ஓபிஸும் சொல்கிறார். இதை புரிந்தவர்கள், புரிந்து நடந்தால் அனைவருக்கும் நல்லது. புரியாமல் நடந்தால், தமிழக மக்களும் அதிமுக தொண்டர்களும் தக்க பாடம் புகட்டுவார்கள்" என்றார்.

முன்னதாக, தேனி மாவட்டம் சின்னமனூரில், முன்னாள் முதலமைச்சர்கள், எம்ஜிஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பிறந்தநாளை முப்பெரும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.. இந்த விழாவில், இரட்டை மாட்டு வண்டி பந்தயமும் நடத்தப்பட்டது. சின்னமனூர்லிருந்து இருந்து மேகமலை செல்லும் சாலையில் நடைபெற்ற இந்த மாட்டுவண்டி பந்தயத்தில், 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்தன..

200 ஜோடி மாடுகள்

தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாட்டு வண்டிகளுடன் அதன் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இளஞ்ஜோடி, புள்ளிமான், வான் சிட்டு, தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு , கரிச்சான், பெரிய மாடு என 8 வகையான பிரிவுகளில் 200 க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் போட்டிகளில் கலந்து கொண்டன.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், இந்த பந்தயத்தை கொடியசைத்து துவங்கி வைத்துமே, மாட்டு வண்டிகள் பந்தய எல்லையை நோக்கி சீறிப்பாய்ந்து ஓடின... சின்னமனூர்யிலிருந்து மேகமலை செல்லும் சாலையில் சுமார் 8 கிலோமீட்டர் தூரத்துக்கு பந்தயம் உற்சாகம் குறையாமல் நடைபெற்றது..

கைகளை தட்டி ஆரவாரம் - பரிசுகள்

இந்த பந்தயத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்களும், அதிமுக தொண்டர்களும், தேனி மாவட்டத்தை சேர்ந்த இரட்டை மாட்டு வண்டி விளையாட்டு ஆர்வலர்களும் என அனைவரும் திரண்டு வந்து ரசித்தனர்.. சாலையோரங்களில் குழுமி நின்று வேடிக்கை பார்த்த பார்வையாளர்கள் அத்தனை பேரும், தங்கள் கைகளை தட்டி, ஆரவாரம் செய்து போட்டியாளர்களுக்கு உற்சாகத்தை தந்தனர்..

இறுதியில், இந்த மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பணமும், பரிசு கோப்பையும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த மாட்டு வண்டி போட்டிகள் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+