திமுக போட்ட ஸ்கெட்ச்! விடாது துரத்தும் ‘சிறுத்தை’! வசமாய் சிக்கிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்!
தேனி : தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் சிறுத்தை மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனும் புகார் அளித்துள்ள நிலையில் நிலத்தின் உரிமையாளர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என வனத்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த விவகாரத்தை வைத்து ஓபி ரவீந்திரநாத்குமாருக்கு நெருக்கடி அளிக்கவும் திமுக தரப்பு தயாராகி வருகிறது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் ஓ.பி.எஸ் மகனான எம்.பி. ரவீந்திரநாத்க்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தின் சோலார் மின்வெளியில் சிக்கி சிறுத்தை ஒன்று சில தினங்களுக்கு முன்பு உயிர் இழந்தது.
இந்தச் சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது. சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள், ரவீந்திரநாத் தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவரை கடுமையாக தாக்கி அவரை கைது செய்துள்ளனர்.

ரவீந்திரநாத் எம்.பி.
மேலும் ரவீந்திரநாத் தோட்டத்தில் பணியாற்றும் மேலாளர்களான ராஜவேல், தங்கவேல் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், வனத்துறையினர் தோட்டத்தின் உரிமையாளரான ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் எம்.பி. மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அவரின் தோட்ட தொழிலாளர்களை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போராட்டம்
இதை கண்டித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பவர்கள் சங்கத்தின் சார்பாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வனத்துறையினர் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்றும், ஆட்டுக்கிடை அமைத்த அலெக்ஸ் பாண்டியன் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறக்கூறியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திமுக சார்பிலும் தங்க தமிழ்ச்செல்வன் புகார் அளித்தார்.

வனத்துறை அதிரடி
இந்நிலையில் தேனி மாவட்ட பெரியகுளம் லட்சுமிபுரம் சொர்கம் வன பகுதியில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு வேலியில் சிறுத்தை சிக்கி உயிரிழந்த சம்பவத்தில் அந்த நிலத்தின் உரிமையாளரான அறிமுக கவுண்டர் மகன் காளிஸ்வரன், வெங்கடசாமி மகன் தியாகரான் ஆகியோருக்கு தேனி வனத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதற்காக வனத்துறை சார்பில் தற்போது சமன் வழங்கப்பட்டுள்ளது

அதிகரிக்கும் நெருக்கடி
மேலும் ஆடு கிடை அமர்த்திய அலெக்ஸ் பாண்டியன் தோட்ட மேலாளர் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள நிலையில், மேலும் மற்றுமொரு நிலத்தின் உரிமையாளரான தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஓபி ரவீந்திரநாத் குமாருக்கு சட்டரீதியாக ஒப்புதல் பெற்று அவருக்கும் சமன் அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவ்விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வனும் புகார் அளித்துள்ள நிலையில் இதனை வைத்து ஓபி ரவீந்திரநாத்குமாருக்கு நெருக்கடி அளிக்கவும் திமுக தரப்பு தயாராகி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications