22 முறை விடாமல் ஆவேசம்.. கணவனை காலி செய்த தேனி பெண்.. கள்ளக்காதலனுடன் சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் 22 இடங்களில் கத்தியால் குத்தி தொழிலாளி கொல்லப்பட்டுள்ளார்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்து கட்டிய இளம்பெண் சிக்கியது எப்படி என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சிறைக்கு போன கணவனை ஜாமீனில் எடுக்க உதவியவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண்ணின் சபலத்தால் நடந்து துயரங்களையும் பார்ப்போம்.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே, குச்சனூரில் இருந்து சங்கராபுரம் செல்வதற்கு அடர்ந்த வனப்பகுதி பாதை இருக்கிறது. கரடு முரடு பகுதியான இந்த பாதையில் கடந்த 5-ந்தேதி வனத்துறையினர் ரோந்து சென்றார்கள். அங்கு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் உடல் கிடந்தது. இதைக்கண்ட வனத்துறையினர், சின்னமனூர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர் அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சின்னமனூர் போலீசார் சென்றனர். அவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, யார் அவர், எப்படி சொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

theni crime

சின்னமனூர் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், வீரபாண்டி அருகே உள்ள மாணிக்காபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்றாயன் (வயது 39) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் இவர், உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று வீட்டை அடித்து நொறுக்கியதாக புகார் எழுந்தது. இதன்பேரில் வீரபாண்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தார்கள். பின்னர் சென்றாயன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் 4-ந்தேதி தான் சென்றாயன் ஜாமீனில் வெளியே வந்தார். ஆனால் அடுத்த நாளே அவர், கத்தியால் கொடூரமான முறையில் 22 இடங்களில் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா அல்லது குடும்பத்தில் பிரச்சனையில் கொல்லப்பட்டாரா, சென்றாயனை கொலை செய்தது யார்? என்பது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுபற்றி தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் சென்றாயனும் அவரது மனைவியும் வேறு ஒருவருடன் பைக்கில் சென்றதை கடைசியாக பார்த்தவர்கள் கூறினார்கள். இதையடுத்து சென்றாயனின் மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து அவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சென்றாயனின் மனைவி அதே பகுதியை சேர்ந்த தனது கள்ளக்காதலன் ராஜபிரபு (23) என்பவருடன் சேர்ந்து, சென்றாயனை தீர்த்து கட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து சென்றாயனின் மனைவி, ராஜபிரபு ஆகியோரை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சென்றாயனின் மனைவி போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், கடந்த மாதம் உறவினர் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கிய புகாரில் என் கணவர்ன சென்றாயனை வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது அவரை பாா்ப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த ராஜபிரபுவின் உதவியை நாடினேன். இதனையடுத்து நாங்கள் 2 பேரும் போலீஸ் நிலையத்துக்கு சென்றோம். ஆனால் அதற்குள் சென்றாயன் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன்பிறகு ராஜபிரபுவும், நானும் சென்றாயனை ஜாமீனில் எடுக்கும் பணியில் ஈடுபட்டோம். அப்போது எங்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் எங்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தி கள்ளக்காதலாக ஒரு கட்டத்தில் மாறியது. சிறையில் சென்றாயன் இருந்தபோது நாங்கள் 2 பேரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்தோம். ராஜபிரபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். இதனால் என்னை அவர் திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார். அங்கு நாங்கள் 2 பேரும் குடும்பம் நடத்தி வந்தோம்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நாங்கள் 2 பேரும் சொந்த ஊருக்கு வந்தோம். சின்னமனூர் அருகே ஒரு தோட்டத்தில் எனது தந்தை வேலை செய்து வருகிறார். அங்குள்ள தோட்டத்து வீட்டிலேயே அவர் வசித்து வருகிறார். அங்கு கடந்த செப்டம்பர் 4-ந்தேதி நானும், ராஜபிரபுவும் சென்று தங்கியிருந்தோம். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த சென்றாயன் வீட்டுக்கு சென்றார். வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் நாங்கள் இருந்த தோட்டத்துக்கு சென்றாயன் வந்தார்.

அங்கு நானும், ராஜபிரபுவும் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எங்களுடைய கள்ளக்காதலை கண்டுபிடித்த சென்றாயன் 2 பேரையும் கண்டித்தார். இதுதொடர்பாக ராஜபிரபுவிடம், சென்றாயன் கடும் தகராறு செய்தார். அவரை ஒரு கட்டத்தில் ராஜபிரபு சமாதானப்படுத்தினார். அதன்பிறகு அங்கிருந்து நானும், ராஜபிரபு, மற்றும் என் கணவர் சென்றாயன் ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராஜபிரபு ஓட்டினார். பின்னால் நானும் என் கணவரும் அமர்ந்திருந்தோம்.

சின்னமனூர் அருகே சங்கராபுரம்-குச்சனூர் சாலையில் வனப்பகுதியில் சென்றபோது மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளை நிறுத்திய ராஜபிரபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சென்றாயனை சரமாரியாக குத்தினார். உடல் முழுவதும் 22 இடங்களில் சென்றாயனுக்கு கத்திக்குத்து விழுந்தது. சிறிதுநேரத்தில் சம்பவ இடத்திலேயே சென்றாயன் சுருண்டு விழுந்து இறந்தார். இதைத்தொடர்ந்து நானும், ராஜபிரபும் மோட்டார் சைக்கிளிலேயே ஊருக்கு வந்துவிட்டோம். அதன்பிறகு எதுவும் தெரியாதது போல 2 பேரும் அன்றாட பணியை மேற்கொண்டோம். ஆனால் விசாரணையில் போலீசிடம் சிக்கி கொண்டோம்..இவ்வாறு பூங்கொடி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியே தீர்த்து கட்டிய சம்பவம் தேனி சின்னமனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொலை செய்யப்பட்ட சென்றாயன், கைதான அவரது மனைவிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் மகள், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள். மகனுக்கு ஒரு வயது தான் ஆகிறது. தந்தை கொலை செய்யப்பட்டதாலும், தாய் சிறை சென்றதாலும் அந்த பிஞ்சு குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. சென்றாயனின் மாமானார் தான் 2 குழந்தைகளையும் பராமரித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+