300 வாகனங்கள்.. 8 ஆயிரம் பேர்! ஓபிஎஸ் கோட்டையில் மாஸ் காட்டிய ஆர்.பி.உதயகுமார்! எடப்பாடி ஹேப்பி
தேனி : தேனி மாவட்டத்தில் நடந்தது திமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டமா?அல்லது ஓபிஎஸ்ஸை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டமா? என்ற அளவிலேயே ஆர்ப்பாட்டமும் பேச்சும் இருந்த நிலையில், ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக இருந்ததோடு, சுமார் 300 வாகனங்களில் இருந்து 8 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
Recommended Video
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்தும்,சொத்துவரி, மின்கட்டணம் உயர்வினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உள்ள மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி, மலைக்கோட்டை வி.அய்யப்பன் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்டத்திலும், தளவாய் சுந்தரம் தலைமையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திலும், ஆர்.காமராஜ் மற்றும் எம்.ராம்குமார் தலைமையில் தஞ்சாவூர் வடக்கு மாவட்டத்திலும், ஓ.எஸ்.மணியன் மற்றும் எஸ்.வி.திருஞானசம்பந்தம் தலைமையில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்திலும், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் தேனி மாவட்டத்திலும், என்.ஆர்.சிவபதி மற்றும் வரகூர் அ.அருணாசலம் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று நடத்தப்படும் முதல் ஆர்ப்பாட்டம் என்பதாலும் ஓபிஎஸ்இல் சொந்த மாவட்டம் என்பதாலும் தேனியில் மிகப் பிரம்மாண்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமாருக்கு உத்தரவிடப்பட்டது எடப்பாடி உத்தரவினை மிக கச்சிதமாக நிறைவேற்றியும் செய்திருக்கிறார் ஆர்.பி. உதயகுமார்.

தேனியில் ஆர்.பி.உதயகுமார்
தேனி மாவட்டத்தில் நடந்தது திமுக அரசு எதிர்த்து ஆர்ப்பாட்டமா?அல்லது ஓபிஎஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டமா? என்ற அளவிலேயே ஆர்ப்பாட்டமும் பேச்சும் இருந்தது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் இடையே நடந்த மோதலால் தொண்டர்கள் யார் பக்கம் என்று நிரூபிக்க எடப்பாடி இன்று தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டார். தேனி மாவட்டத்தில் ஒபிஎஸ்க்கு எதிராக பலத்தை நிரூபிக்கவே இந்த ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது என்கின்றனர் அதிமுகவினர்.

எடப்பாடி உற்சாகம்
இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக அறுவிக்கபட்ட பின் தேனி மாவட்டத்தில் நடைபெறும் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதால் ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டம் என்பதாலும், தேனி மட்டுமல்லாது மதுரை திண்டுக்கல் சிவகங்கை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 300க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பிரியாணி விருந்து, குளிர்பானங்கள் என பலத்த கவனிப்பு இருந்தது. இதற்கான லட்சக்கணக்கான ரூபாய்களை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாரி இறைத்துள்ள நிலையில், பணத்தைக் கொட்டி கூட்டம் சேர்ப்பது ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல இதே போன்ற கூட்டத்தை தமிழகம் முழுவதும் தங்களாலும் நடத்த முடியும் என்கின்றனர் தேனி மாவட்ட ஓபிஎஸ் தரப்பினர்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ஹார்ட் டிஸ்க் திருட்டு: தூரசக்தியை காப்பாற்ற நினைக்கும் பேரசக்தி? சிபிஐ விசாரணை தேவை! எடப்பாடி -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications