"மளிகை கடைக்குள்ளேயே".. லாஸ்ட் மினிட்டில் மோப்பம் பிடித்த போலீஸ்.. ஒரு உயிரே போயிடுச்சே.. ஐயோ
மனைவியை கொன்ற கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்
தேனி: பெண்ணை கொன்ற விவகாரத்தில், போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட குற்றவாளியை தேனி போலீசார் கைது செய்துள்ளனர்..!!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வசித்து வருபவர் அபூபக்கர் சித்திக்.. இவருக்கு வடிவேல் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. 40 வயதாகிறது.. மனைவி பெயர் ரம்ஜான்பேகம். இவருக்கு 33 வயதாகிறது.
15 வருடங்களுக்கு முன்பு, வேடசந்தூரில் உள்ள கார்மெண்ட்ஸில் வேலை பார்த்தபோது, இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு, அதுவே காதலாக கனிந்துள்ளது.. இறுதியில் திருமணமும் செய்து கொண்டனர்.. இப்போது 2 பெண் குழந்தைகள் இவர்களுக்கு இருக்கிறார்கள்.

லவ் மேரேஜ்
இந்நிலையில் தம்பதிக்கு இடையே நிறைய கருத்துவேறுபாடுகள் காரணமாக தகராறுகள் வெடித்துள்ளது.. இதை அந்த பகுதி மக்களே நன்று அறிந்துள்ளார்கள்.. அந்தவகையில், நேற்றைய முன் தினமும், இவர்களுக்குள் சண்டை வந்துள்ளது.. அப்போது, ரம்ஜான் பேகத்தை அபூபக்கர் பொதுமக்கள் முன்னிலையிலேயே அவரது கடை முன்பு தாக்கியுள்ளார்... ஆவேசமாக அடித்ததில், அன்றைய தினம் இரவு ரம்ஜான் பேகம் திடீரென உயிரிழந்துவிட்டார்.. ஆனால், தன்னுடைய மனைவி உடல்நலக் குறைவால் இறந்து விட்டதாக, சொந்தக்காரர்களுக்கு எல்லாம் போனை போட்டார் அபூபக்கர்..

தோண்டிய போலீஸ்
இறுதியில் உறவினர்கள் மத்தியில், சடலத்தை அடக்கம் செய்வதற்காக ஏற்பாடுகளையும் நடத்தினார். அந்த நேரம் பார்த்து, ரம்ஜான் பேகத்தின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, அந்த பகுதி மக்கள் சந்தேகப்பட்டார்கள்.. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பெரியகுளம் போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணையை மேற்கொண்டனர்.. அடக்கம் செய்ய போன ரம்ஜான் பேகத்தின் சடலத்தை கைப்பற்றி, போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு, பெரியகுளம் போலீசார், அபூபக்கர் சித்திக்கை கைது செய்து ஸ்டேஷனுக்கும் அழைத்து சென்றனர்..

மூக்கு வாய்
ரம்ஜான் பேகத்தின் இறப்பு, இயற்கை மரணமா? தற்கொலையா? அல்லது கொலையா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை துவங்கியது.. இதனிடையே ரம்ஜான் பேகத்தின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டும் வந்துவிட்டது.. அதில், ரம்ஜான் பேகம் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி, மூச்சுத்திணறல் ஏற்படுத்தி, அவரை கொன்றிருப்பது தெரிய வந்தது. இதற்குபிறகு, அபூபக்கர் சித்திக்கிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.. அப்போதுதான் மொத்த உண்மையையும் சொன்னார்.. சம்பவத்தன்று மாலை 5 மணிக்கு, அபூபக்கர் 2 பெண் குழந்தைகளையும் வீட்டிலிருந்து, அழைத்துக் கொண்டு பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள அவரது சொந்தக்காரர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றாராம்..

மளிகை கடை
பிறகு, அந்த உறவினரின் வீட்டிலேயே குழந்தைகளையும் விட்டுவிட்டு ''நீங்கள் இங்கேயே இருங்கள், நான் இன்னொரு விசேஷ வீட்டிற்கு செல்ல வேண்டி இருக்கு.. நான் போய் விட்டு, மறுபடியும் வந்து வந்து உங்களை வீட்டிற்கு கூட்டிட்டு செல்கிறேன்'' என்று சொல்லிவிட்டு கிளம்பி உள்ளார்.. ஆனால், அங்கிருந்து புறப்பட்ட அபூபக்கர் சித்திக், விசேஷ வீட்டிற்கு போகாமல், தன்னுடைய வீட்டிற்கே வந்துள்ளார். அப்போதுதான், ரம்ஜான் பேகத்திடம் மறுபடியும் தகராறை ஆரம்பித்துள்ளார்.. இவர்கள் தகராறு நடந்து கொண்டிருந்த நேரம், சித்திக்கின் அம்மா பாத்திமாவும் வீட்டிலேயே இருந்திருக்கிறார்..

கம்பி எண்ணுகிறார்
இவர்கள் 2 பேர் சண்டையையும் அடக்க முயன்றும் முடியாமல், பொறுமை இழந்து வீட்டை விட்டே கிளம்பி போய்விட்டாராம்.. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அபூபக்கர், ரம்ஜான் பேகத்தின் மூக்கு மற்றும் வாயை பிடித்து அமுக்கி உள்ளார்.. இதில்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு ரம்ஜான் பேகம் துடிதுடித்து இறந்துள்ளார்.. இவ்வளவையும் போலீசில் வாக்குமூலமாக தந்தார் அபூபக்கர்.. இப்போது, நீதிபதி முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு, ஜெயிலில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்றால், அபூபக்கர் மளிகை கடை வைத்திருக்கிறார்.. அந்த கடைக்கு வருகின்ற ஒரு சில பெண்களிடம் தகாத உறவையும் வைத்துள்ளதாக தெரிகிறது.

பலசரக்கு கடை
அதாவது, பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் தவறான வழியில் பல்வேறு பெண்களிடம் தகாத உறவு வைத்துக் கொண்டு பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் ஆசை வார்த்தை கூறி ஒரு சில இச்சைக்கு உட்படுத்தி அவர்களிடமிருந்து பணம் பறித்தும் வந்துள்ளார். அதுமட்டுமல்ல, தனது வறுமையை சொல்வது போல் ஏமாற்றி, ஆரம்பத்தில் கடனாக பணம் பெறுவது போல பல லட்சம் ரூபாய் பெற்று பல பெண்களை ஏமாற்றி பல குடும்ப பெண்களை சீரழித்துள்ளார்..இந்த விஷயம் தெரிந்து அதிர்ச்சியான ரம்ஜான் பேகம், அந்த தவறான உறவுகளை தட்டி கேட்டு, தகராறும் செய்துள்ளார்.. இதனால், ரம்ஜான் பேகத்தையே வெறுக்க துவங்கி, அதுதான் கொலை வரை கொண்டுபோனதாக சொல்கிறார்கள்..












Click it and Unblock the Notifications