திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்? முதல்வர் ஸ்டாலின், அமைச்சரை புகழ்ந்து பேச்சு!
திருநெல்வேலி: திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியனை புகழ்ந்து பேசினார். இந்நிலையில் தான் நயினார் நாகேந்திரன் விரைவில் திமுகவில் இணையலாம் என்ற தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இன்று பல்வேறு புதிய திட்டங்களின் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள மா.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் திருநெல்வேலி சட்டசபை தொகுதியின் பாஜக எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறேன்
கடந்த சில தினங்களுக்கு முன் திருநெல்வேலிக்கு வந்த முதல்வரிடம் இந்த மருத்துவமனை தொடர்பாக கோரிக்கைகளை வைத்தேன். நிகழ்ச்சி முடிந்து முதல்வர் அங்கிருந்த சென்ற சில நிமிடத்தில் அமைச்சர் மா.சுப்ரமணியன் என்னை தொடர்பு கொண்டார். அப்போது அவர் ‛‛விரைவில் திருநெல்வேலி வருகிறேன். அப்போது உங்கள் கோரிக்கை குறித்த உத்தரவை போடுவோம்'' எனக்கூறினார். ஒரு செயலை செய்கின்றபோது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த ஆட்சியாக இருந்தாலும் பாராட்ட வேண்டும். எனவே அமைச்சர் மற்றும் முதல்வரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

உலா வரும் செய்தி
பாஜகவின் எம்எல்ஏவாகவும், சட்டசபை குழு தலைவராக இருந்தாலும் கூட நயினார் நாகேந்திரன் பெரிய அளவில் அரசியல் பணி செய்வதில்லை என்ற விமர்சனம் பாஜகவில் உள்ளது. மேலும் அவர் விரைவில் மாற்று கட்சிக்கு செல்லலாம் என அரசியல் களத்தில் செய்திகள் நீண்டகாலமாக சுற்றி சுற்றி உலா வருகின்றன.

வேறு ரூட்டில் நயினார்
அதோடு சமீபகாலமாக நெல்லை மாவட்டத்தில் நடைபெறும் பெரும்பாலான அரசு நிகழ்ச்சிகளில் திமுகவினருடன் நயினார் நாகேந்திரன் தவறாமல் கலந்து கொள்கிறார். இது அரசியல் நாகரீகத்தோடு கலந்து கொள்வதாக வைத்து கொண்டாலும் அரசு மேடையில் முதல்வரையும் அரசையும் தொடர்ந்து பாராட்டி வருகிறார். அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியிலும் நயினார் நாகேந்திரன் முதல்வரை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். பாஜக தலைமை தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில் தான் நயினார் நாகேந்திரன் முற்றிலும் வேறு ரூட்டில் பயணித்து வருகிறார்.

திமுகவில் இணைகிறாரா?
திமுக அரசின் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் அடுத்தடுத்து ஊழல் புகார்களை வெளியிட்டு வரும் சூழலில் பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சியை புகழும் சம்பவம் அரசியல் விமர்சகர்கள் இடையே சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அதேபோல் ஆளும் கட்சி கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் முன்வைத்த கோரிக்கையை காது கொடுத்து வாங்காமல் உள்ளதாக கூறப்படும் நிலையில் எதிர்கட்சியை சேர்ந்த நயினார் நாகேந்திரன் நெல்லை அரசு மருத்துவமனை தொடர்பாக முன் வைத்த கோரிக்கையை சில நாளில் நிறைவேற்றி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் விரைவில் நயினார் நாகேந்திரன் திமுகவில் இணையலாம் என நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications