நெல்லையில் கிணற்றில் மிதந்த கர்ப்பிணி மனைவி.. நாடகமாடிய அரசு ஊழியர் சிக்கியது எப்படி?
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்த அந்தோணி அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பாக்கியத்தாய்.இவரது உடல் கிணற்றில் மிதந்தது.இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, நாடகமாடிய கணவரான அரசு ஊழியரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் அருகே குப்பனாபுரத்தைச் சேர்ந்த 25 வயதாகும் அந்தோணி, அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், மேல இலந்தைக்குளத்தைச் சேர்ந்த மோசே மகள் பாக்கியத்தாய்க்கும் (வயது 23) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கல்யாணம் நடந்தது. பாக்கியத்தாய் 2 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் கடந்த25ம் தேதி அப்பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மர்மமான முறையில் பிணமாக மிதந்து கிடந்தார்.

வேலைக்கு செல்ல வற்புறுத்தல்
தகவல் அறிந்ததும், போலீசார் விரைந்து வந்தனர். பாக்கியத்தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. திருமணமான சில நாட்களிலேயே மனைவி பாக்கியத்தாயை வேலைக்கு செல்லுமாறு கணவர் அந்தோணி கூறி வந்தாராம். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதனால் மனைவியின் வீட்டில் இருந்து வரதட்சணையாக கூடுதலாக நகை, பணம் வாங்கி வருமாறு கூறி அந்தோணி அடிக்கடி தகராறு செய்து வந்தாராம்.
தேவாலயம் சென்ற அந்தோணி
நேற்று முன்தினம் காலையில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்லலாம் என்று கூறி மனைவி பாக்கியத்தாயை அந்தோணி அழைத்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்தோணி துண்டால் மனைவி பாக்கியத்தாயின் கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது.
பத்திரப்பதிவு சந்தேகங்கள்.. சிறு தவறு வாழ்நாள் சேமிப்பை காலி செய்திடும்.. பொதுமக்கள் அறிய வேண்டியவை
நாடகமாடிய அரசு ஊழியர்
இதில் பாக்கியத்தாய் சில நிமிடங்களிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயந்து போன அந்தோணி, பாக்கித்தாய் உடலை அங்குள்ள தோட்டத்தின் கிணற்றில் வீசி விட்டு சென்றார். பின்னர் அவரை தேடுவது போன்று நாடகமாடியது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தார்கள். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications