இண்டிகோ சொன்ன குட்நியூஸ்.. திருச்சி - அபுதாபி இடையே கூடுதல் விமான சேவை.. ஆகஸ்ட் 11 முதல் தொடக்கம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இருந்து அபுதாபிக்கு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி முதல் கூடுதலாக 4 விமான சேவைகள் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திருச்சியில் இருந்து அபுதாபிக்கு இயங்கும் விமான சேவைகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வழியாக அபுதாபிக்கு சென்று வந்தது. இந்த விமானம் என்பது வாரம் ஒருமுறை மட்டுமே இயங்கியது. அதன்பிறகு நிர்வாக காரணங்களால் அந்த விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது.

trichy abu dhabi

இதனால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு நேரடியாக செல்ல முடியாத நிலை உருவானது. திருச்சி மற்றும் அதனை சுற்றி வசிக்கும் மக்கள் சென்னை உள்ளிட்ட பிற விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து அபுதாபி சென்று வந்தனர்.

இந்நிலையில் தான் கடந்த 2022-ம் ஆண்டு மாா்ச் மாதம் முதல் வார நாட்களில் செவ்வாய்க்கிழமை மட்டும் மாலை 5.30க்கு புறப்பட்டு செல்லும் வகையில் ஒரே ஒரு விமான சேவையை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் மீண்டும் தொடங்கியது. அதன் பின்னா் வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும் என தற்போது வார நாள்களில் 3 விமான சேவைகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், அபுதாபிக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையடுத்து, கூடுதல் விமானங்களை இயக்க வலியுறுத்தப்பட்டு வந்தது. திருச்சி மத்திய மாவட்ட பகுதிகளைச் சோ்ந்த பயணிகள், விமானத்தில் இருக்கைகள் கிடைக்காத நிலையில், வேறு விமான நிலையங்களை நாடும் நிலை உள்ளது.

உதாரணமாக, சென்னை, கோவை, திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து பயணிக்கின்றனா். மேலும் சிலா் திருச்சியிலிருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானம் மூலமும் பயணித்து வருகின்றனா். இதனால் பயணிகள் கூடுதல் நேரம் பயணிக்க வேண்டி இருப்பதோடு, செலவும் அதிகரிக்கிறது.

இந்நிலையில் தான் திருச்சி - அபுதாபி இடையே வாரநாள்களில் 4 சேவைகளை இயக்கவுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச் சேவை வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தொடங்க உள்ளது. இந்த 4 நாட்களும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து இண்டிகோ விமானம் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 10 மணிக்கு அபுதாபியை சென்றடையும்.

அதேபோல மறுமார்க்கமாக அபுதாபியில் இருந்து மறுநாள் காலை 6.30-க்கு விமானம் புறப்பட்டு திருச்சிக்கு வரும். இந்த விமானங்களுக்கான முன்பதிவுகளும் தொடங்கியுள்ளது. துபாய்க்கு செல்லும் பயணிகள் அபுதாபியிலிருந்து சாலை மாா்க்கமாகவும் செல்ல முடியும் என்பதால் அந்த பயணிகளும் இந்த விமானத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த கூடுதல் விமான சேவையால் வாரத்தில் திருச்சி - அபுதாபி இடையே விமான சேவைகளின் எண்ணிக்கை என்பது 3ல் இருந்து 7 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. இது வளைகுடா நாடுகளுக்கு சென்று வரும் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+