திருநெல்வேலி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிரட்டும் கோடைக்காலம்.. கூடங்குளத்தில் மின் உற்பத்தி பாதிப்பு.. மின்வெட்டு அபாயத்தால் மக்கள் பீதி.!?

Google Oneindia Tamil News

திருநெல்வேலி : கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகளுக்காக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், கோடைக்காலத்தில் மின் வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு நிதி உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அங்குள்ள இரு அணு உலைகள் மூலம் இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படுகிறது.

கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்கும் முடிவை கைவிடுக.. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்

இதனைத்தொடர்ந்து 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் அணு உலைகள் அமைப்பதற்கான இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. 3 மற்றும் 4வது அணு உலையில் இருந்து வருகிற 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மின் உற்பத்தியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மின்னுற்பத்தி நிறுத்தம்

மின்னுற்பத்தி நிறுத்தம்

இந்நிலையில் ரூ.49,625 கோடி மதிப்பில் 5 மற்றும் 6வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2020 மற்றும் 2021ஆம் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களில் பராமரிப்பு பணிக்காக 2வது அணுஉலையில் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டது. பராமரிப்பு பணிகள் முடிந்து அதே மாதம் 26ஆம் தேதி மாலை மீண்டும் மின்னுற்பத்தி தொடங்கியது.

 பராமரிப்பு பணிகள்

பராமரிப்பு பணிகள்

இதற்கிடையே இன்று முதல் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2வது உலையில் அதிகாலை பராமரிப்பு பணிக்காக மீண்டும் மின்னுற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது . இதனால் 1000 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் சுமார் 8 வாரங்களுக்கு நடைபெறம் என்றும், பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் மின் உற்பத்தி தொடங்கும் என அணு மின் நிலைய நிர்வாகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

மின் தடை அபாயம்

மின் தடை அபாயம்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடும் வெயில் கொளுத்தி வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் வெயில் காரணமாக மக்கள் அவதி அடைந்துள்ளனர் அவ்வப்போது ஏற்படும் மின்தடையும் சிக்கலை மேலும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இரண்டாவது உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி மின் தடை அபாயத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The second reactor at the Koodankulam reactor is reportedly at risk of a power outage in the summer as 1000 MW of power generation has been affected for maintenance and refueling work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X