ஓஸியிலேயே அரசு பஸ்ஸில் டிரிப்.. நெல்லை பெண்ணை அசிங்கமாக திட்டிய டிரைவர்.. திருநெல்வேலியில் அதிர்ச்சி
நெல்லை: ஏற்கனவே அரசு மகளிர் கட்டணமில்லா பஸ்ஸில் பயணிக்கும் பெண்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சையாக பலரும் பேசி வருகிறார்கள்.. இப்போது திருநெல்வேலி மகளிர் விடியல் பேருந்தில் பயணித்த பெண்ணை ஆபாசமாக பேசிய ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது திருநெல்வேலியில்?
தமிழக அரசு பொதுமக்களின் தேவைக்காகவும், வசதிக்காகவும் எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும், திட்டங்களையும் செய்து வருகின்றது. அதிலும் பெண்களின் நலனில் கூடுதல் அக்கறை கொண்டு, சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது.

இலவச பஸ் பயணம்
அதில் ஒன்றுதான் மகளிருக்காக இலவச பேருந்து சேவையாகும்.. திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றதுமே, முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தில் முதல் கையெழுத்தை போட்டு துவங்கி வைத்தார். ஆரம்பம் முதலே இந்த இலவச பேருந்து வசதியானது பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
ஆனால், திமுகவை சேர்ந்த மூத்த அமைச்சரான பொன்முடி தொடர்ந்து மக்களுக்காக அரசு அறிவித்த பஸ் திட்டத்தை ஓசி பஸ் என்று பேசி பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இது அரசியல் களத்தில் மட்டுமின்றி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பொன்முடியின் துணைப்பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.. அத்துடன், இப்படியெல்லாம் இனியும் விமர்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மற்ற அமைச்சர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஓசி பஸ்ஸில்
ஆனால், ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏவும் பெண்களை ஓசி பஸ்ஸில் செல்லுங்கள், உங்கள் ஊருக்கு ஓசி பஸ் விட போகிறோம் என்று பேசியது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது..
சில மாதங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ மகாராஜன், "பெண்கள் எல்லாரும் ஓசி பஸ்ல தானே போயிட்டு இருக்கீங்க, உங்க கிராமத்திற்கும் ரோடு போட்டதும் ஓசி பஸ்ல போங்க.." என்று சர்ச்சையாக பேசியிருந்தார்.
திமுக எம்எல்ஏ
பெண்கள் எல்லாரும் அரசின் பஸ்ஸில், தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்கு ஓசியில் செல்லுங்கள். வீட்டிலுள்ள ஆண்கள் சமையல் செய்யட்டும். உங்கள் ஊருக்கு விரைவில் புதிய தார்சாலை அமைத்து அந்த வழித்தடத்தில் அரசு பஸ் விடப்போறோம்.. அதிலும் பெண்கள் ஓசியில் பயணம் செய்ய போறீங்க.. உங்கள் ஊருக்கு பஸ் விட்டதுமே, ஏரோபிளேன் வேணும், ரயில் வேணும் என்று கேட்டுடாதீங்க" என்றெல்லாம் பேசியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
அமைச்சர், எம்எல்ஏக்களை தாண்டி, இப்போது அரசு பேருந்து டிரைவர்கள் பொதுமக்களை ஒருமையில் பேசியும், ஆபாசமாக பேசும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இதோ இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
திருநெல்வேலி போக்குவரத்து கழகம், கட்டபொம்மன் நகர் பணிமனையை சார்ந்த தடம் எண் 2 மகளிர் இலவச பஸ்கள், பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் இருந்து, புதிய பஸ் ஸ்டாண்டு வழியாக ரயில்வே ஸ்டேஷனுக்கு இயக்கப்பட்டு வருகிறது.
டிரைவர் ஆபாச பேச்சு
இந்நிலையில், நேற்று முன்தினம் இந்த பஸ்ஸின் டிரைவராக முத்தூரை சேர்ந்த முருகேசன் என்பவரும், கண்டக்டராக சுரேந்திரன் என்பவரும் டியூட்டியில் இருந்துள்ளனர்..
அப்போது இரவு நேரம் ஒரு பெண்மணி வண்ணாரப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் ஏறியிருக்கிறார்.. அரவிந்த் கண் மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் இறங்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.. ஆனால் கண்டக்டர் விசில் அடித்தும் டிரைவர் பஸ்ஸை நிறுத்தவில்லை என தெரிகிறது.
பெண்மணி இறங்க வேண்டும் என டிரைவரிடம் சத்தமாக சொல்லவும், இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பஸ் ஸ்டாப்பை தாண்டி சற்று தூரமாக பஸ்ஸை நிறுத்தி பெண்ணை இறக்கி விட்டதோடு, ஆபாச வார்த்தைகளாலும் அந்த பெண்ணை அசிங்கமாக திட்டியதாக தெரிகிறது. "பணம் தராமல் பஸ்ஸில் வர்றீங்க" என்றும் பேசியிருக்கிறார்.
வாக்குவாதம் - வீடியோ
உடனே அந்த பெண் தன்னுடைய குடும்பத்தினரை போனில் அழைத்து, ரயில்வே ஸ்டேஷனுக்கு வர சொல்லியிருக்கிறார்.. உடனே அவர்களும் திரண்டு வந்து சம்பந்தப்பட்ட டிரைவரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.. இந்த வாக்குவாதம்தான் வீடியோவாக சமூக வலைதளங்களில் ஷேர் ஆகிவிட்டது.
இந்த வீடியோ வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்த நிலையில், முருகேசனை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு நெல்லை இல்லை! நயினார் நாகேந்திரன் தொகுதி மாறுவதற்கு இப்படி ஒரு காரணமா? பேட்டர்னை பாருங்க! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications