இதுதான் காதல்! கால்கள் செயலிழந்த காதலனை கரம்பிடித்த பெண்.. துரத்தி விட்ட பெற்றோர்.. நெல்லையில் சோகம்
நெல்லை: நெல்லையில் கால்கள் செயலிழந்த காதலனை பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த காதலியை அவரது உறவினர்கள் பிரித்துச் சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனதை பார்த்து காதல் வந்த காலம் எல்லாம் மலையேறி போய், இப்போது வெறும் அழகும் வசதியும் மட்டுமே காதலையும் திருமணத்தையும் நிர்ணயிக்கும் காரணிகளாக மாறி இருக்கின்றன.
அதே சமயத்தில், இப்போதும் அத்திப்பூத்தாற் போ தியை காரணம் காட்டி அதுபோன்ற பெரும்பாலான காதல்கள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. அப்படியொ ல மனதுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதலும் ஆங்காங்கே இருக்கவே செய்கின்றன. ஆனால் வசதியை காரணம் காட்டி அதுபோன்ற பெரும்பாலான காதல்கள் பிரிக்கப்பட்டு விடுகின்றன. அப்படியொரு சம்பவம்தான் நெல்லையில் நடந்துள்ளது. அதுகுறித்த விபரம் வருமாறு:

காதலுக்கு பச்சைக்கொடி..
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த கேசவனேரியை சேர்ந்தவர் பிரகாஷ் (27). அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பிரகாஷும், வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யா (24) என்பவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் நன்கு தெரியும். அவர்களும் இளம் ஜோடிகளின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியிருந்தனர்.

விபத்தால் செயலிழந்த கால்கள்..
இந்த சூழலில், 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை நிமித்தமாக பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்ற போது ஒரு விபத்தில் சிக்கினார். இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதன் விளைவாக, அவரது இரண்டு கால்களும் செயலிழந்தன. இந்த விஷயம் திவ்யாவின் பெற்றோருக்கு தெரியவரவே, பிரகாஷை திருமணம் செய்யக்கூடாது என அவர்கள் கூறத் தொடங்கினர். கால்கள் இல்லாத நபரை திருமணம் செய்தால் எதிர்காலம் வீணாகிவிடும் என அவர்கள் கூறினர்.

உறுதியாக இருந்த திவ்யா..
ஆனால், திவ்யா தனது காதலில் உறுதியாக இருந்தார். நன்றாக இருந்த போது காதலித்துவிட்டு, இப்போது ஊனமடைந்த பிறகு அவரை கைவிட்டு செல்வது நியாயம் அல்ல என்பதில் தெளிவாக இருந்தார். எனினும், திவ்யாவின் பெற்றோர் அவருக்கு அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட தொடங்கினர். இதனால் பிரகாஷை உடனடியாக கரம்பிடிக்க முடிவு செய்தார் திவ்யா. ஆனால் பிரகாஷால் வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டது.

அடித்து இழுத்துச் சென்ற பெற்றோர்..
அதன்படி, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 20-ம் தேதி பிரகாஷின் வீட்டுக்கு சென்ற திவ்யா, அங்கு வைத்தே அவரை திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோரும், உறவினர்களும் கடும் ஆத்திரமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, பிரகாஷின் வீட்டுக்கு சென்ற திவ்யாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு தகராறில் ஈடுபட்டனர். மேலும், பிரகாஷை கடுமையாக தாக்கிய அவர்கள், திவ்யாவை அங்கிருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.
திவ்யாவின் உறவினர்கள் தாக்கியதில் காயமடைந்த பிரகாஷை, அவரது பெற்றோர் மீட்டு வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், தனது மனைவியை மீட்டு தருமாறு பிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications