10 ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை.. ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் நடைமுறைக்கு வரும்.. அண்ணாமலை பேச்சு
நெல்லை: ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும் புதிய கல்விக் கொள்கை அடுத்த 10 ஆண்டுகளில் கொண்டு வரப்படும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதேபோல், ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வி குழந்தைகளை திறமைகளை அழிப்பதாகவும், மெக்காலே கொண்டு வந்த கல்விக் கொள்கையை ஒழித்து புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை என்பது கடந்த 1968ம் ஆண்டு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1976ம் ஆண்டு கல்வி பொதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பின்னர் கடந்த 1986ம் ஆண்டு கல்விக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதையடுத்து 1992ம் ஆண்டு கல்விக் கொள்கை திருத்தப்பட்டாலும், பெருமளவு மாற்றம் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் 2019ல் புதிய கல்விக் கொள்கையை கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தாக்கல் செய்துள்ளது. இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

அண்ணாமலை பேச்சு
இருப்பினும் தமிழ்நாட்டில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தப் நிலையில் திருநெல்வேலி அருகே தாழையூத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசுகையில், இந்தியாவில் மிக வேகமாக மாறிக்கொண்டே இருக்கும் துறை கல்வி துறை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். குழந்தைகளுக்கு முதல் ஆசிரியராக இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். அவர்கள் நம்மிடம் இருக்கும் நேரம் அதிகம்.

புதிய கல்விக் கொள்கை
நம்மிடமிருந்து அதிகமாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே நாம் நல்ல பெற்றோர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் கல்வித் திறனை உயர்த்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி 2020ல் புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்தார். ஆட்சியாளர்கள் எதிர்த்தாலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்.

மாற்றம் வரும்
குழந்தைகளின் வாழ்க்கையில் புதிய கல்விக் கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஆங்கிலேயர் கொண்டு வந்த கல்வி குழந்தைகளை திறமைகளை அழிக்கிறது. மெக்காலே கொண்டு வந்த கல்விக் கொள்கையை ஒழித்து புதிய கல்விக் கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார். புதிய கல்விக் கொள்கையால் மதிப்பெண்களில் எடுக்க வேண்டும் என்ற பிரச்சினையில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

நோக்கம்
நடிகராக வரவேண்டும் என்றால் புதிய கல்விக் கொள்கையை பின்பற்றினால் அவரின் தனித்திறமை முக்கியத்துவம் கொடுத்து நடிகராக முடியும். இசையில் ஆர்வம் இருந்தால் புதிய கல்விக் கொள்கையால் இசைஞானி ஆகலாம். மதிப்பெண் என்ற நிலையில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள் என்பது தான் புது கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம். நல்ல குடிமகனாக வர வேண்டும் என்பதற்காகவே புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துள்ளது.

விஐபி கலாச்சாரம்
விஐபி கலாச்சாரம் என்பதே பள்ளியில் இருந்து தான் வருகிறது அதை அனைத்து பள்ளிகளிலும் உடைத்து மாணவர்களை நல்ல மனிதர்களாக குடிமகன்களாக மாற்றுவது மிக முக்கிய குழந்தைகளை மாற்றுவது என்பது எளிதான காரியம் இல்லை. அதை ஆசிரியர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
-
ஜனநாயகன் படத்தை வெளியிட்ட விஷக்கிருமிகள்.. அடித்து சொன்ன அண்ணாமலை.. சிபிஐ வராங்களாமே -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
ஆதவ் அர்ஜுனா மூலம் ‘ஜனநாயகன்’ படத்தை லீக் பண்ணிட்டு நாடகம்.. சிபிஐ விசாரணை கேட்க ரெடியா? பாயும் பாஜக -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
வானதி சீனிவாசன் ஐசியூவில் அனுமதி.. 3-4 நாட்கள் தொடர் சிகிச்சை தேவையாம்.. என்ன பிரச்சனை? -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
சாத்தூரில் நயினார் வெல்வாரா? தோற்கடிக்க ஸ்டாலின் 2 முக்கிய ‘மூவ்'.. இதை கவனிச்சீங்களா -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர்











Click it and Unblock the Notifications