"பொருநை" அருங்காட்சியகம்.. இன்று அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்: ரூ.33 கோடியில் பிரம்மாண்டம்
சென்னை: நெல்லையில் அமைக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியக கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொல்லியல் துறை சார்பில் ரூ. 33 கோடி மதிப்பில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
பொருநை: கடந்த வருடம் செப்டம்பர் மாதம், சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, நெல்லை மாநகரில் பொருநை நாகரீகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளையில் அகழாய்வு மூலம் கிடைத்த பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

முதல்வரின் இந்த அறிவிப்பினையடுத்து, கடந்த நவம்பரில், நெல்லையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.. அந்தவகையில், பாளை கேடிசி நகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் 4 வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில், பொருநை அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது..
அமைச்சர் தங்கம் தென்னரசு: அந்த இடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.. மொத்தம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கு 13 ஏக்கர் பரப்பளவில் இடம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழரின் அடையாளத்தை உலக மக்களுக்கு எடுத்துச்செல்லும் வகையில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று நடைபெற்றது.. முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, இந்த அடிக்கல் நாட்டும் பணிகளை துவக்கி வைத்தார்.. இன்று காலை நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

ராஜகண்ணப்பன்: தொல்லியல் துறை சார்பில் ரூ. 33 கோடி மதிப்பில் நவீன வசதிகளோடு பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது. உலகத்தரத்தில் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
அகழாய்வு மூலம் கிடைத்த பொருட்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கொற்கையில் 812 பொருட்கள், ஆதிச்சநல்லூரில் 1,620 பொருட்கள், சிவகளையில் 185 பொருட்கள் என 2,617 பொருட்கள் அகழாய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.. இதைத்தவிர, 106 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள், பொருநை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
நெல்லை வங்கியில் விசித்திரம்.. கணவரின் இதய சிகிச்சை பணம்.. காசோலை மூலம் திருடப்பட்டது எப்படி? -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications