கரூர் கேஸில் என் மீது பழியை போட்டார்கள்.. ஜனநாயகனை முடக்கினார்கள்.. அப்படியே ஆக்ரோஷமான விஜய்!
நெல்லை: கரூர் விவகாரம் தொடர்பாக என் மீது பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம், என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நெல்லையில் இன்று பேசினார்.
இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக அதன் தலைவர் விஜய் திருநெல்வேலியில் பிரச்சாரம் செய்கையில், திமுக கையில் முழு பவரும் இருந்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடந்திருக்காது. ஸ்டாலின் சார் அதிகாரம் இல்லாத முதல்வராக இருப்பதால் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இப்போது அவரிடம் முழு அதிகாரம் இருந்தால் எனக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள்.

என் நெஞ்சில் குடியிருக்கும் திருநெல்வேலி மக்களுக்கு வணக்கம் எனக்கூறி தவெக தலைவர் விஜய் பேச்சை தொடங்கினார்; உங்கள் மகன், உங்கள் அண்ணன், உங்கள் நண்பன் உங்களைத்தேடி வந்திருக்கிறேன்; அதிகாரமில்லாத முதல்வராக ஸ்டாலின் இருப்பதால் நெல்லையில் நிகழ்ச்சி நடத்த முடிந்திருக்கிறது.
உங்களுக்காக நான் வந்துவிடக் கூடாது என்பதே திமுக, பாஜகவின் நோக்கம். மீண்டும் திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழலை மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள். திமுகவின் தேர்தல் கணக்குகளை மக்கள் புதைத்துவிட்டார்கள். உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.
கரூர் விவகாரம் தொடர்பாக என் மீது பழியை போட்டார்கள். என்னை முடக்க பார்த்தார்கள். நான் முடங்கவில்லை. நான் வீட்டில் உட்காரவில்லை. மக்கள் இப்போதும் என்னுடன் இருக்கிறார்கள். இதை பார்த்து அவர்களுக்கு ஷாக். என்னடா மக்கள் இப்போதும் இவருடன் இருக்கிறார் என்று அவர்களுக்கு கோபம்.
சரி இவரை எப்படியாவது முடக்க வேண்டும் என்று ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள், அது யார் என்று சொல்ல மாட்டேன். என் படத்தை முடக்கினால் நான் முடங்கிவிடுவேன் என்று நினைத்தார்கள். ஆனால் நான் முடங்கவில்லை. வலிமையாக இருக்கிறேன். இதை பார்த்து ஷாக் ஆனவர்கள் என்னை முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர்.
என்னை மட்டும் முடக்க வேண்டும் என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். நான் செயல்படக்கூடாது என்று எஸ்ஓபி கொண்டு வந்தனர். அதை எல்லாம் மீறி நான் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இந்த எஸ்ஓபி என்னை முடக்காது.
-
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
பெப்பே காட்டிய விஜய்.. விஷத்தை கடைந்த ராகுல்.. திமுக, காங்கிரஸ் பந்தம் டோட்டலாக க்ளோஸ் ஆயிருச்சே -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் பனிப்போர்.. உழைத்தது நாங்க.. பவர் அவங்களுக்கா? மாவட்ட செயலாளர்கள் vs எம்எல்ஏக்கள் முட்டல்! -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
தவெகவை முடக்க இதுமட்டும்தான் ஒரே வழி.. திமுக பிடித்த ரூட்.. ஸ்டாலின் கையில் பிரம்மாஸ்திரம் -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
அந்த குழந்தையே நீங்க தான் சார்.. தவெக கூட்டணி.. துரை வைகோ கொடுத்த ஹின்ட்












Click it and Unblock the Notifications