திருவண்ணாமலை அருகே சோகம்.. லாரி மோதியதில் அப்பளம் போல நொறுங்கிய கார்.. 7 பேர் பலி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே லாரி கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அந்தணூர் என்ற இடத்தில் புறவழிச் சாலையில் பெங்களூர் நோக்கி கர்நாடக பதிவு எண் கொண்ட கார் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் திருவண்ணாமலை நோக்கி லாரி ஒன்று வந்த கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கியது. இதில் காரில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். 2 சிறுவர்கள் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காருக்குள் சிக்கியவர்களை மீட்டனர்.

தொடர்ந்து பலியானவர்கள் உடல்கள் செங்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே விபத்து நேரிட்டதும் லாரி டிரைவர் தப்பி சென்றார். இதனால் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. விபத்து எப்படி நேரிட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications