திருவண்ணாமலை தீப மலையில் கார்த்திகை அன்று ஏறலாமா? கூடாதா? ஆய்வில் இறங்கியது வல்லுநர் குழு!
சென்னை: திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்டதையடுத்து மகா தீபம் ஏற்றும் பகுதியில் வல்லுநர் குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர். இந்த ஆய்வுக்குப் பிறகே 2500 பக்தர்கள் மலைக்கு அனுமதிக்கப் படுவார்களா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் கனமழை காரணமாக அண்ணாமலையார் மலையில் மண்சரிவு ஏற்பட்டு வ.உ.சி நகரில் வீடுகள் மண்ணில் புதைந்து. ஒரு வீட்டில் இருந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீண்ட மீட்புப் போராட்டத்துக்குப் பிறகு 7 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கார்த்திகை தீபத் திருவிழா நேரத்தில் அண்ணாமலையார் மலை அடிவாரத்தில் மண் சரிவால் 7 பேர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், வரும் டிசம்பர் 13 ஆம் தேதி திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட இருக்கிறது. அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். மண்சரிவு காரணமாக மகா தீபத் திருவிழாவின் போது மலைக்குச் செல்லும் 2500 பக்தர்களுக்கு இந்த ஆண்டு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், வனத்துறையினர் அண்ணாமலையார் மலை மீது ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, மலையேறும் முக்கிய பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மலையேறும் அனைத்து பாதைகளும் மண் சரிந்து உள்ள ஆபத்தான சூழலில் 200 அல்லது 300 டன் எடை கொண்ட மிகப்பெரிய பாறைகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீப மலையில் மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரை கொண்டு செல்லும் பாதைகளிலும் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், தீபம் ஏற்றும் சமயத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் என்றும் வனத்துறையினர் தேவஸ்தான அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை தீப மலையில் ஏற்பட்ட மண் சரிவு குறித்து ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறை வல்லுனர்கள் குழு மலை மீது பயணம் செய்து மலையின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் தலைமையிலான 8 பேர் கொண்ட வல்லுநர் குழு திருவண்ணாமலையில் ஆய்வு செய்கிறது.
தீபத்திருவிழாவின்போது மலை ஏற 2500 பக்தர்களை அனுமதிப்பதா? வேண்டாமா? என இந்த வல்லுநர் குழு சோதனைக்குப் பிறகே முடிவு செய்யப்படும். இந்த ஆய்வுக்கு பின்னர் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
8 பேர் கொண்ட குழு மலைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும், ஆய்வு அறிக்கைக்கு பின்பே 2500 பக்தர்கள் மலைக்கு அனுமதிக்கப் படுவார்களா? இல்லையா? என்பது தெரிவிக்கப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளில் போலீசார் தங்க உள்ளதன் காரணமாக, அந்தப் பள்ளிகளுக்கு இன்று முதல் டிசம்பர் 16 வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சென்னை, பெங்களூர், புதுச்சேரி உள்ளிட்ட நகரங்களில் இருந்து 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்கப்படுகின்றன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications