அண்ணாமலையார் கோயிலில் சரமாரியாக தாக்கிக் கொண்ட பக்தர்கள்.. ஒருவரின் மண்டை உடைப்பு.. கடும் பதற்றம்!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டதில் ஒருவரின் மண்டை உடைந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தர்களும் அதிகளவில் குவிந்தனர். அதிகாலை 4.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் - உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
ராஜகோபுரம் நுழைவாயில் வழியாக வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் வரிசையில் நின்ற போது வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்,
ஆந்திரா - கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications