Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"எல்லையில்லாத ஆதியே.. எல்லாமுணர்ந்த சோதியே.." மழையிலும் சுடர்விட்டு எரியும் திருவண்ணாமலை மகாதீபம்

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையிலும் மகா தீபம் எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர். 6ஆம் தேதி கார்த்திகை தீப திருநாளன்று ஏற்றப்பட்ட மகாதீபம் நான்காம் நாளாக சுடர் விட்டு பிரகாசமாக எரிந்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தெப்ப உற்சவத்தை தரிசனம் செய்தனர்.

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்கு சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 6ஆம் தேதி மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையின் உச்சியில் ஏற்றப்பட்டது.

மகா தீபத்தை காண வெளிநாடு, வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்தனர். மலையையே சிவனாகவும், சிவனையே மலையாகவும் கருதும் திருவண்ணாமலையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலத்தை பௌர்ணமி, தீபம் உள்ளிட்ட பல்வேறு நாட்களில் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.

கிரிவலம்

கிரிவலம்

அண்ணாமலையார் கிரிவலத்தின் மகிமையை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் கார்த்திகை தீபம் நிறைவு பெற்று இரண்டாம் நாளும், அதேபோல் பொங்கல் திருவிழாவின் போது திருவூடல் முடித்து சிவனடியார் பிருங்கி மகரிஷிக்கு காட்சி அளிக்கவும், ஆண்டிற்கு இரண்டு முறை அண்ணாமலையார் கிரிவலம் வருவது வழக்கம்.

அண்ணாமலையார் தரிசனம்

அண்ணாமலையார் தரிசனம்

இந்த ஆண்டு கார்த்திகை தீபம் டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைந்துள்ள நிலையில், தெப்ப உற்சவம் களைகட்டியுள்ளது. இதற்காக அதிகாலை திருக்கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரம் செய்யப்பட்டு கோயில் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

கிரிவலம் வந்த அண்ணாமலையார்

தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் தனது குடும்பத்துடன், கிரிவலத்தின் மகத்துவத்தை பக்தர்களுக்கு உணர்த்தும் வகையில் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். அப்பொழுது பக்தர்கள் வழிநெடுகிலும், சாமிக்கு மாலை அணிவித்து, ஆடைகள் வழங்கி, தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

11 நாட்கள் தீப தரிசனம்

11 நாட்கள் தீப தரிசனம்

மகாதீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். அண்ணாமலை உச்சியில் தினசரி மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் காலை 6 மணிக்கு குளிர்விக்கப்படும். மகாதீபத்தை வருகின்ற 16ஆம்தேதி வரை தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் 4ஆம் நாளான இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக மாவட்டத்தில் பெய்து வரும் மழையிலும் மகா தீபம் எரிந்து வருகிறது. இதனை பொதுமக்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர்.

தீப கொப்பறை

தீப கொப்பறை

11 நாட்கள் நிறைவடைந்த பின்னர் தீப கொப்பரை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதைத் தொடர்ந்து ஆயிரம் கால் மண்டபத்தில் தீப கொப்பரை பாதுகாப்பாக வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நாளில் நடராஜ பெருமானுக்கு திலகமிடப்பட்ட பின்னர் பிரசாதமாக வழங்கப்படும்.

தெப்ப உற்சவம்

தெப்ப உற்சவம்

நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பல்வேறு வாகனங்களில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சமேத ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பவனி நடைபெற்றது. தீபத்திருவிழாவின் தொடர் நிகழ்வாக மூன்று நாட்கள் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+