பச்ச குழந்தை.. யூகேஜி மாணவிக்கு பாலியல் கொடுமை.. செய்தது பள்ளி தாளாளர் கணவர்.. போளூர் ஷாக்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளரின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த கொடுமையான சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில், தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியை, சேத்பட் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் மனைவி பிரபாவதி என்பவர் நடத்தி வருகிறார். மேலும் காமராஜ் என்பவர் சேத்பட் அருகே உலகபட்டு கிராமத்தில் உள்ள அரசுபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி பிரபாவதி நடத்தும் சாந்தா பள்ளிக்கு காமராஜ் அடிக்கடி வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்தப் பள்ளியில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே சேத்பட் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மகள் படித்து வந்துள்ளார். இதனிடையே, பள்ளியின் தாளாளர் பிரபாவதி கணவர் காமராஜ், இந்தப் பள்ளி குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவி, வீட்டுக்குச் சென்று அழுவதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் உடலை பரிசோதனை செய்தபோது உடலில் காயங்கள் காணப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, உடனடியாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு நடைபெற்ற சிகிச்சையில், சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாலியல் பலாத்காரம் செய்ததாக, காமராஜ் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சேத்துப்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் அந்தப் பள்ளிக்குச் சென்றனர். பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டார்.
இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட தாளாளர் காமராஜ் தலைமறைவானார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டுக்கு இடையே, கோவிலுக்கு போய் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பிய காமராஜ், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் போலீசாரால் கைது செய்தனர். திருவண்ணாமலை அருகே, யூகேஜி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி தாளாளர் காமராஜ் கைது செய்யப்பட்ட சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவர் அரசு ஆசிரியர் வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி படிக்கும் பள்ளியில் பிற மாணாக்கர்களின் பெற்றோர் குவிந்ததால், அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications