ஆரணி கிணற்றில் தண்ணீர் இரைத்த புதுமண தம்பதி.. அடுத்தடுத்து நடந்ததை பாருங்க.. திகைத்த திருவண்ணாமலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாப்பிள்ளையால் கதிகலங்கி போயிருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.. இது தொடர்பான விசாரணையும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்துள்ளது புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்டது காரப்பட்டு என்ற கிராமம். இங்கு வசித்து வந்தவர் பரமேஸ்குமார்.. இவருக்கு 23 வயதாகிறது.

தம்பதி: இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.. மனைவி பெயர் நிரோஷா .. நேற்று மாலை, புதுமண தம்பதியர் 2 பேரும் சேர்ந்து, வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் கயிறு கட்டி வாளியில் தண்ணீர் எடுத்திருக்கிறார்கள்.. அப்போது, எதிர்பாராதவிதமாக பரமேஸ்குமார் கிணற்றில் தவறி விழுந்துவிட்டார்.. இதனால் நிரோஷா பதறிப்போனார்.. ஆனால், பரமேஸ்குமாருக்கு நீச்சல் தெரியும் என்பதால், மெதுவாக நீந்த முயன்றார்..
அது பழைய கிணறு என்பதால், கிணற்றுக்குள் ஏராளமான செடி கொடிகள் வளர்ந்திருந்தன.. எனினும், அந்த செடி கொடிகளை பிடித்து கொண்டே, தட்டுத்தடுமாறி மேலே ஏற முயன்றார். இதைப்பார்த்ததுமே மனைவிக்கு ஓரளவு நிம்மதி வந்தது..
செடி கொடிகள்: செடிகொடிகளை பிடித்து ஏற துவங்கியதுமே, பரமேஸ்குமாரை அங்கிருந்த விஷப்பாம்பு ஒன்று கடித்துவிட்டது.. இதனால், பதற்றமடைந்த பரமேஸ்வர குமார், "என்னை விஷப்பாம்பு கடித்துவிட்டது. என்னால் மேலே ஏற முடியவில்லை" என்று மனைவியிடம் சொல்லியபடியே, மயங்கிய நிலையில் அதே கிணற்றில் விழுந்து மூழ்கிவிட்டார்.
கணவன் சொன்னதையும், கண்ணெதிரே கணவன் தண்ணீரில் மூழ்குவதையும் கண்டு அதிர்ச்சியடைந்த நிரோஷா, அலறி கூச்சலிட்டார்... அப்போதுதான், சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலிருந்தவர்கள், ஓடிவந்து, கிணற்றில் குதித்து, மயங்கிக்கிடந்த பரமேஸ்குமாரையும் காப்பாற்ற முயன்றார்கள்.. ஆனால், அந்த பாம்பு அங்கேயே இருந்ததால், கிணற்றுக்குள் இறங்குவதற்கு எல்லாருமே பயந்தார்கள்.. அதனால், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செங்கம்: செங்கத்திலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் இறங்கினர்.. ஆனால், அதற்குள் பரமேஸ்குமார் இறந்து விட்டார்... தீயணைப்புத் துறையினர் அவர் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். போஸ்ட்ட மார்ட்டம் துடிந்ததையடுத்து, பரமேஸ்வரன் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தச்சம்பவம், திருவண்ணாமலையில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
மனைவி நிரோஷாவின் வீட்டிற்கு பின்புறம் இந்த கிணறு உள்ளது.. விவசாய கிணறு என்பதால், தண்ணீர் எப்போதுமே நிறைந்திருக்குமாம்.. தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார் பரமேஸ்வர குமார்.. தீயணைப்பு வீரர்கள் வந்தபோது, கிணற்றின் கரையில் அந்த பாம்பு பதுங்கியிருந்ததாம்.. அதை லாவகமாக பிடித்து வெளியே எடுத்தபோதுதான், அது கண்ணாடிவிரியன் பாம்பு என்று தெரியவந்தது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications