"இளம் பெரியார் உதயநிதி.." பிறந்த நாள் டிரஸை பார்த்ததும் தெரிந்துவிட்டதாம்.. எ.வ.வேலு சொன்ன காரணம்!
திருவண்ணாமலை: திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திராவிட இயக்கம் 5 தலைமுறை கண்ட இயக்கம் என்றார். மேலும், அதில் 5ம் தலைமுறையை இப்போது உதயநிதி வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், உதயநிதியை இளம் பெரியார் என்றும் குறிப்பிட்டுப் பேசினார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.
திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் திருவண்ணாமலையில் இன்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, மூத்த திமுக தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு திமுக தலைமையைப் புகழ்ந்து பேசினார்.

பிறந்த நாள் டிரஸ்
பிறந்த நாளில் கருப்பு ஆடையை அணிந்த மற்றொரு இளம் பெரியார் தான் உதயநிதி என்றார். மேலும், திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டுகள் உதயநிதி எடுத்துச் செல்வார் என்றும் எ.வ.வேலு பேசினார். அவர் மேலும் பேசுகையில், "ஒருவர் பிறந்த நாளில் வெள்ளாடை உடுத்திக் கொள்ளவே கருதுவார்கள். ஆன்மீகவாதிகள் மஞ்சள் ஆடை உடுத்த நினைப்பார்கள். இன்னும் கொஞ்சம் மென்மையானவர்கள் தங்களுக்குப் பிடித்த ஆடையை அணிந்து கொள்வார்கள்.
உதயநிதி இந்தாண்டு பிறந்த நாள் விழாவில்.. பெரியார் உடுத்திய கருப்பு ஆடையை அணிந்திருந்தார். அப்படித் தான் மக்களைச் சந்தித்தார். திராவிட இயக்கத்தை இன்னும் 50 ஆண்டுகள் உதயநிதி எடுத்துச் செல்வார் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.
இளம் பெரியார் உதயநிதி
திராவிட இயக்கம் 5 தலைமுறையைப் பார்த்துவிட்டது. முதல் தலைமுறை பெரியார்.. 2ம் தலைமுறை அண்ணா.. 3ம் தலைமுறை கருணாநிதி.. 4ம் தலைமுறை ஸ்டாலின். இந்த இயக்கத்தை அடுத்து எடுத்துச் செல்பவர் உதயநிதி 5ம் தலைமுறை. அவர் பிறந்த நாளில் கருப்பு ஆடையை அணிந்தது கண்டு பூரித்துப்போனேன். இந்த இயக்கத்திற்கு இளம் பெரியாராக உதயநிதியை கொடுத்தற்கு நன்றி" என்று பாராட்டிப் பேசினார்.
திருவண்ணாமலையில் இன்று நடந்த இந்த திமுக இளைஞரணி கூட்டம் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்தில் பெருந்திரளாகத் தொண்டர்கள் கூடியிருந்தனர். குறிப்பாக இளைஞர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. இளைஞர்களின் ஆதரவு திமுகவுக்குக் குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையில் திமுக இந்தக் கூட்டத்தை நடத்திக் காட்டியிருக்கிறது.
உதயநிதி பேச்சு
இந்தக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "கார் பேட்டரி டவுனஅ ஆனால் 4 பேரை தள்ள வைத்து அதை ஸ்டார்ட் பண்ணலாம். ஆனால், காரில் இஞ்சினே இல்லை என்றால் எவ்வளவு தள்ளினாலும் ஸ்டார்ட் ஆகாது. இஞ்சின் இல்லாத கார் தான் தற்போதைய அதிமுக. பாஜக என்ற லாரி இஞ்சின் இல்லாத காரை இழுத்துச் செல்லப் பார்க்கிறது.
பெரியார் என்ற கொள்கை நெருப்பு
கடைசி திமுக தொண்டர் இருக்கும் வரை தமிழகத்தை பாஜகவால் தொட்டுக் கூட பார்க்க முடியாது. நீங்கள் பீகாரில் வென்று இருக்கலாம். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் என வடநாட்டில் வென்று இருக்கலாம். தமிழகத்திலும் அப்படியே நுழைந்துவிடலாம் என தப்புக் கணக்கு போடுகிறீர்கள். ஆனால், அது நடக்காது.. ஏனென்றால் தமிழ்நாட்டிற்கு என ஒரு தனித்துவம் இருக்கிறது. பெரியார் என்ற கொள்கை நெருப்பு சுற்றி நின்று தமிழகத்தைக் காப்பாற்றி வருகிறது" என்று பேசியிருந்தார்.
-
விசிகவுக்கு 'டாட்டா'.. திமுகவுக்கு 'நோ'! தனிக்கட்சி தொடங்குகிறாரா ஆளூர் ஷாநவாஸ்? பின்னணி -
"பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி".. மரியா வில்சனின் வெள்ளை அறிக்கையை விமர்சித்த திமுக -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா?












Click it and Unblock the Notifications