முகநக நட்பது நட்பன்று! பள்ளி டூ பணி ஓய்வு வரை.. நண்பர்களின் மறைவால் நெகிழ்ந்த திருவாரூர்
திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளில் ஒன்றாக பயின்று, ஒரே இடத்தில் வேலை பார்த்து, ஒரே நாளில் பணி ஓய்வு பெற்ற நண்பர்கள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களின் உறவு முறையில் எத்தனை சிறப்பம்சங்கள் இருந்தாலும், நண்பர்கள் என்கிற சிறப்பான உறவு முறையை போன்றதொரு சொந்தம் எங்கும் கிடைத்துவிடாது. நட்பை தமிழ்ச்சமூகம் எந்த அளவுக்கு கொண்டாடியிருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் புறநானூறு. கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பைதான் இந்த பாடல் விளக்குகிறது. பாண்டிய நாட்டில் வாழ்ந்து வந்த புலவர் பிசிராந்தையார், சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அதீத நட்பை கொண்டிருந்தார்.

மன்னருக்கும் நட்பிருந்தது. இப்படியாக இவர்களது நட்பு வளர்ந்தது. ஆனால் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக்கொண்டதில்லை. ஒரு கட்டத்தில் மன்னன் வடக்கிருந்து உயிர் துறந்தார். அதே போல புலவரும் உண்ணாமல் வடக்கிருந்து உயிர் துறந்தார். இப்படி நட்பை கொண்டாடி தீர்த்த தமிழ்ச்சமூகத்தில், உண்மையான நட்புக்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.
அதாவது, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் மன்னார்குடியை சேர்ந்த சிவராமகிருஷ்ணன். இவரது நண்பர்தான் ராமலிங்கம். இருவரும் பள்ளி பருவத்திலிருந்து நண்பர்கள். ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் பள்ளியிலிருந்து ஒன்றாக படித்திருக்கிறார்கள். சுதந்திரம் பெற்ற காலம் அது. அப்போதுதான் நாடு வளர்ச்சியடைய தொடங்கியிருக்கிறது. பள்ளிகளும், கல்லூரிகளும் போதுமான அளவு வந்திருக்கவில்லை. எனவே கல்லூரிக்கு போக வேண்டும் எனில், வெளியூருக்குதான் சென்று படிக்க வேண்டும்.
இப்படியாக, டவுனுக்கு சென்று பாலிடெக்னிக் பயின்றுள்ளனர். அங்கேயும் ஒரே அறை எடுத்து ஒரே பிரிவில் படித்திருக்கிறார்கள். பின்னர் நாட்டின் சூழல் மாறத் தொடங்கியது. பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. எனவே வேலை வாய்ப்புகள் ஓரளவுக்கு எளிதாக கிடைத்தது. இதனையடுத்து. இவர்கள் இருவரும் மத்திய அரசின் நிறுவனத்தில் வேலைக்காக அப்ளை செய்துள்ளனர். சொல்லி வைத்ததை போல இருவருக்கும் ஒரே நாளில் வேலை கிடைத்துவிட்டது.
அப்புறம் என்ன? வீடு, திருமணம், குழந்தைகள், பேரக்குழந்தைகள் என வாழ்க்கை அப்படியே நகர்ந்திருக்கிறது. சிவராமகிருஷ்ணன் மன்னார்குடி அருகே நாலாம்தெரு பகுதியிலும், ராமலிங்கம் அசேஷம் பகுதியிலும் குடியேறினர். பின்னர் இவர்கள் வாழ்க்கையின் அந்த நாளும் வந்தது. பணி ஓய்வு பெறும் நாள்தான் அது. அப்போதும் கூட இருவருக்கும் ஒரே நாளில் பணி ஓய்வு கிடைத்திருக்கிறது. ஓய்வு காலங்களில் இரு குடும்பத்தினரும் ஒன்றாக சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அதேபோல எல்லா நல்ல காரியங்களுக்கும் இரு வீட்டாரின் உறவினர்கள் தவறாமல் பங்கேற்பார்கள். இப்படியே காலம் மெல்ல நகர்ந்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் சிவராமகிருஷ்ணனின் உடல் நிலை மோசமடைந்தது. சிகிச்சையில் முன்னேற்றம் இல்லை. காலம் திண்ற தன் வாழ்க்கையின் நுனி பகுதியில் சிவராமகிருஷ்ணன் நின்றுக்கொண்டிருந்தார். இறுதியாக கடந்த 4ம் தேதி சிவராமகிருஷ்ணன் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 80. இந்த செய்தியை கேட்ட அடுத்த சில நிமிடங்களில் அவரது நண்பர் ராமலிங்கமும் அதே நாளில் உயிரிழந்தார்.
பள்ளி, கல்லூரி, வேலை, பணி ஓய்வு என அனைத்திலும் இணை பிரியாதிருந்த நண்பர்கள், மரணத்திலும் இணை பிரியாமல் சென்றிருக்கும் சம்பவம் திருவாரூரில் பெரும் நெகிழ்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications