எனக்கு பல கோடி கடன் இருக்கு.. செலவுக்கு வச்சிருந்த பணம் அது.. ரெய்டு பற்றி காமராஜ் பரபர பேட்டி!
திருவாரூர் : அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனை நிறைவடைந்த நிலையில், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காமராஜ் தெரிவித்துள்ளார்.
எனது வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதிமுகவை மிரட்டும் ஆளும்கட்சியின் முயற்சி ஒருபோதும் பலிக்காது என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய 49 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரெய்டில் ஈடுபட்டனர். மன்னார்குடியில் காமராஜ் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் காமராஜ்.

அதிரடி ரெய்டு
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் நண்பர்கள் வீடுகள் என 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கி அதிரடி சோதனை நடத்தினர்.

பணம், நகைகள் பறிமுதல்
இந்த அதிரடி சோதனையில் இதுவரை ரூ 41.06 லட்சம் பணம் மற்றும் 963 சவரன் நகைகள் சிக்கியதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல் 15.50 லட்சம் கணக்கில் வராத பணம் தொடர்பான ஆவணங்கள், வங்கி பெட்டக சாவி, பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 24 கிலோ வெள்ளி பொருட்கள், ஐ போன்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நோக்கம் கொண்ட ரெய்டு
இந்நிலையில், மன்னார்குடியில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், "இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. இதனை பழிவாங்கும் நடவடிக்கையாகவே பார்க்கிறோம். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சோதனை மூலம் என்னையோ அதிமுகவின் சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. இதன்மூலம் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தை முடக்கி விடலாம் என திமுக நினைக்கிறது. அது ஒருபோதும் முடியாது.

அதிமுக தான் ஹாட் டாபிக்
இந்த இயக்கத்தின் வேகத்தை எவராலும் தடுத்திட முடியாது. பொதுக்குழு கூட்டம் 11-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதிமுகவை தவிர மற்ற கட்சிகள் மறைந்துவிட்டன. அதிமுக மட்டுமே பேசுபொருளாக உள்ளது. பொதுக்கூட்டத்தை சிறுமைப்படுத்தவே ஆளுங்கட்சி இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது. உங்கள் மிரட்டலுக்கெல்லாம் வேறு யாரையாவது பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆளுங்கட்சி சதி
ஒற்றைத் தலைமை வந்தால் பல்வேறு கட்சிகளுக்கு ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இது போன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது. அதிமுக தொண்டர்களை தொட்டுக்கூட பார்க்க முடியாது. என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அதையே அதிகாரிகள் தங்கள் கைப்பட எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.

செலவுக்கு வைத்திருந்த பணம்
செலவுக்காக வைத்திருந்த 60 ஆயிரம் பணத்தை மட்டுமே அதிகாரிகள் சோதனையில் கைப்பற்றி அதை மீண்டும் திருப்பி அளித்துவிட்டு சென்றுவிட்டனர். பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். முறைகேடு செய்ததாக கூறும் பணத்தைவிட அதிகமாக எனக்கு கடன் உள்ளது. அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை. இரண்டு வங்கிகளில் பல கோடி கடன் வாங்கித்தான் தஞ்சாவூரில் மருத்துவமனை கட்டுகிறோம்.

விசுவாசமாக உழைப்பேன்
காலையிலிருந்து இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். காலமெல்லாம் உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக உழைப்பேன்." எனத் தெரிவித்தார்.

யோக்கியவான் அல்ல
ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்று ஓ.பி.எஸ் இரண்டு நாட்களுக்கு முன்பாக தெரிவித்திருந்தாரே அதுதான் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனைக்கு காரணமா என்கிற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் காமராஜ், சொன்னவர் ஒன்றும் யோக்கியவான் அல்ல என பதில் அளித்தார்.
-
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications