திருவாரூரில் தங்கக் காப்பை அடகு வைத்த நபர்.. நகைக்கடை ஊழியருக்கு நம்ப முடியாத அதிர்ச்சி மக்களே
திருவாரூர்: தங்கம் விலை விண்ணை தொட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தங்க நகை மோசடிகளும் பெருகி வருகின்றன.. கடந்த வாரம் கோவை துடியலூரில் போலியான தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்று கடன் மோசடி செய்த நிலையில், தற்போதும் அதே போன்ற சம்பவம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. நகைக்கடைக்காரர்களே இந்த விஷயத்தில் ஏமாந்த சம்பவம் பெரும் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
தங்கம் விற்கும் விலையில் நடுத்தர, ஏழை மக்களால் நகைகளை வாங்கவே முடியாத நிலைமை வந்துள்ளது.. தங்கத்துக்கு நாளுக்கு நாள் டிமாண்டு ஏறுவதால்தான், தங்க நகைகள் கொள்ளை போகும் சம்பவங்களும் அதிகரித்தபடியே உள்ளன.. இதில் தங்க நகை மோசடிகளையும் சேர்த்து கொள்ளலாம்..

தங்க நகைகளில் கவரிங் எது? நிஜமான தங்கம் எது? என்பதை கண்டுபிடிக்கவே முடிவதில்லை.. அந்த அளவிற்கு தகிடுதத்தம் வேலை நடப்பதாக சொல்கிறார்கள். பார்ப்பதற்கு அச்சுஅசல் தங்கம் போலவே கவரிங் இருப்பதால், இதை பார்த்து ஏமாற்றுவதும் மோசடிபேர்வழிகளும் நிறைய பேர் உண்டு.
போலி தங்க நகை மோசடி
அதனால்தான், தங்க நகைகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், நகை கடைகளில் சென்று உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நகைக்கடையில், அந்த நகையை உரசி பார்த்து, தரம் மற்றும் விலையை சரியாக சொல்லிவிடுவார்கள்.
அல்லது தங்க நகைகள் அசலா? போலியா? என்பதை நாமும் வீட்டிலேயே சிலவழிவகைகளை பின்பற்றி பரிசோதிக்கலாம். உதாரணத்துக்கு ஒரு பக்கெட்டில் நீரை ஊற்றி அதில், நகைகளை போட வேண்டும். அந்த நகை நீரில் மூழ்கினால், அது உண்மையான தங்க நகை என்று அர்த்தமாம். சிறிது நேரம் மிதந்தால், அது தங்கம் போலியானது என்று அர்த்தமாம். காரணம், தங்கம் எவ்வளவு லேசானதாக இருந்தாலும், அது எப்போதும் தண்ணீரில் மூழ்கிவிடும்.
ஒரிஜினல் தங்கம் எது
அதேபோல தங்கத்தின் மீது வியர்வை பட்ட நிலையில், அதன் மீது வாசனை வீசுகிறது என்றால், அது கலப்படம் உள்ள தங்கம் என்று அர்த்தம். உண்மையான தங்கத்திற்கு வாசனையும் கிடையாது.
அதேபோல சமையலயில் உள்ள வினிகர் மூலமும், நைட்ரிக் அமிலத்தை பயன்படுத்தியும் தரத்தை அறியலாம். அதாவது தங்க நகையின் மீது சில துளிகள் நைட்ரிக் அமிலம் அல்லது விநிகரை ஊற்ற வேண்டும். தங்கத்தின் நிறம் பச்சையாக மாறினால் தங்கம் போலியானது என்று அர்த்தம். உண்மை தங்கம் எப்போதும் நிறம் மாறாது என்கிறார்கள் வியாபாரிகள்.
தங்க நகைக்கடை
இப்படியிருக்கும் சூழலில், திருவாரூர் மாவட்டத்தில் தங்க மோசடி நடந்து, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது..
கூத்தாநல்லூரை சேர்ந்தவர் தேவராஜ்.. இவர் பஜாரில், அதிஷ்டா கோல்டு கம்பெனி என்ற பெயரில் நகை கடையை வைத்து நடத்தி வருகிறார்.. சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு, பாண்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவர், அவசரமாக பணம் தேவைப்படுவதால், 4 சவரன் தங்க காப்பை விற்க வேண்டும் என்று சொல்லி நகைக்கடைக்கு வந்துள்ளார்.
தங்க காப்பு - இரும்பு காப்பு
விஜய் உள்ளூரை சேர்ந்தவர் என்பதால், அவரது தங்க காப்பை வாங்கி சோதித்துள்ளனர்.. பிறகு அவரிடம் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களையும்பெற்றுக்கொண்டு, 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயை விஜய்க்கு தந்துள்ளனர்..
பிறகு 10 நாட்கள் கழித்து, விஜய் தந்த தங்க காப்பை உருக்கியபோது, அது தங்கம் இல்லை என்பதும், வெறும் இரும்பு உலோகம் என்பதும் தெரிந்து நகை கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்க முலாம் பூசிய இரும்பு காப்பை தந்து, மூன்றரை லட்சம் பணத்தையும் விஜய் வாங்கி சென்றுள்ளது பிறகுதான் தெரியவந்தது.
கம்போடியா நாட்டில் விஜய்
பிறகு, நகைக்கடை சார்பில் கூத்தாநல்லூர் போலீஸில் இது தொடர்பாக புகார் தரப்பட்டது.. போலீசாரும் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்டனர்.
ஆனால் இந்த விஷயம் 10 நாட்களுக்கு பிறகே தெரியவந்ததால், அதற்குள் விஜய் கம்போடியா நாட்டிற்கு பறந்துவிட்டாராம்.. இதையடுத்து, மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெளிநாட்டுக்கு சென்ற விஜய்யை கைது செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications