சிஎஸ்கேவில் தோனி விளையாடுவாரா? தக்கவைக்கப்படும் வீரர்கள் யார்? இடியை இறக்கிய காசி விஸ்வநாதன்
திருவாரூர்: ஐபிஎல் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடுவாரா? சிஎஸ்கேவில் தக்க வைக்கப்படும் வீரர்கள் யார்? என்பது பற்றி அதன் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறிய பதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல்,மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி வீரர்களின் ஏலம் என்பது வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியம் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைத்து கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தக்க வைக்கப்படுவாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
தோனி தற்போது அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று ஐபிஎல்லில் மட்டுமே விளையாடி வருகிறார். அவருக்கு தற்போது 43 வயது ஆகிறது. இதனால் வரும் சீசனில் தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடுவாரா? இல்லையா? அவரை சிஎஸ்கே அணி தக்க வைக்குமா? ஒருவேளை தோனி விளையாடவிட்டால் அவருக்கு சிஎஸ்கே அணியியில் ஆலோசகர் பொறுப்பு வழங்கப்படுமா? என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால் சிஎஸ்கே அணி ரசிகர்களை பொறுத்தவரை தோனி கண்டிப்பாக விளையாட வேண்டும். தோனியை சிஎஸ்கே அணி கண்டிப்பாக தக்க வைக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்நிலையில் தான் திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பங்கேற்றார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛ஐபிஎல்லில் சிஎஸ்கே என்றாலே தோனி தான். இது உங்களுக்கும் தெரியும். இந்த சீசனில் சிஎஸ்கேவிற்காக தோனி விளையாடுவாரா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு காசி விஸ்வநாதன், ‛‛எங்களுக்கும் தோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆடுவேனா, ஆடமாட்டேனா என்று இன்னும் அவர் எங்களுக்கு சொல்லவில்லை. அணியில் தக்க வைக்க வேண்டிய வீரர்களின் விபரத்தை அளிக்க அக்டோபர் 31ம் தேதி தான் கடைசி நாள். அதற்குள் எங்களிடம் சொல்வதாக கூறியுள்ளார். அவர் சொன்னதற்கு பிறகு அதுபற்றி உங்களிடம் நான் கூறுகிறேன். எங்களை பொறுத்தவரை தோனி விளையாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர் ஆடுவார் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.
குஜராத் அரச குடும்ப வாரிசாக இந்திய கிரிக்கெட் வீரர் தேர்வு! அஜய் ஜடேஜாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்
இதையடுத்து, ‛‛ஐபிஎல்லில் Uncapped விதிமுறை உள்ளது. அது தோனிக்காகவே கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறதா? அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு காசி விஸ்வநாதன், ‛‛தோனிக்காக இந்த விதிமுறை ஒன்றும் கொண்டு வரவில்லை. இந்த விதி முதலில் இருந்தே இருக்கிறது. இந்தியாவுக்காக 5 ஆண்டுகள் ஒருவர் விளையாடவில்லை என்றால் Uncapped பிளேயராக இருப்பார் என்ற விதி 2008 முதல் உள்ளது. 2023 என்று நினைக்கிறேன் ஏதோ ஒருமுறை இந்த விதி நீக்கப்பட்டது. தற்போது மீண்டும் திரும்ப கொண்டு வந்துள்ளனர். இந்த Uncapped பிளேயர் லிஸ்ட்டில் நிறைய பேர் 6 முதல் 7 பேர் வருகிறார்கள்’’ என்றார்.
அதன்பிறகு, ‛‛சிஎஸ்கேவில் யாரையெல்லாம் தக்க வைக்கிறீர்கள்?’’ என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு காசி விஸ்வநாதன், ‛‛சிஎஸ்கேவில் யாரை தக்க வைக்கிறோம் என்பதை இப்போது சொல்லி விட முடியாது’’ என்றார். இருப்பினும் சிஎஸ்கேவில் தோனி விளையாட வேண்டும் என்று காசி விஸ்நாதன் விரும்பினாலும் கூட அவரிடம் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் வரும் சீசனில் சிஎஸ்கேவிற்காக தோனி விளையாடுவாரா? இல்லையா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications