அடுத்தடுத்து மயங்கி விழுந்த மாணவர்கள்.. மதிய உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி.. நடந்தது என்ன
திருவாரூர்: அரசுப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
திருவாரூர் மாவட்டம் கண்டியூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
நேற்று வழக்கம் போல இந்த மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு உள்ளனர். மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சுமார் 3 மணி அளவில் முதலில் ஏழு மாணவ மாணவியர் வகுப்பறையிலேயே வாந்தி எடுத்து, மயங்கி உள்ளனர்.

அவர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக ஆலங்குடி ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மதிய உணவு சாப்பிட்ட 37 மாணவ மாணவிகளையும் தலைமையாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியைகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர்..
இது தொடர்பான தகவல் கிடைத்ததும் திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ மாணவிகளிடம் நலன் விசாரித்தார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு உரியச் சிகிச்சை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
ஒரே நேரத்தில் அரசுப் பள்ளியில் மதிய உணவு உண்ட பல மாணவ மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications