பஸ்ஸில் வேகமாக ஏறிய சுடிதார் போட்ட பெண்.. திடீரென வந்த 'கலெக்டர் காயத்ரி'யால் அதிர்ந்த மன்னார்குடி
திருவாரூர்: மன்னார்குடி பஸ் ஸ்டாண்டில் திடீரென சுடிதார் போட்ட பெண் ஒருவர் முககவசம் அணிந்த படி வேகவேகமாக பேருந்தில் ஏறுகிறார், சுற்றி முற்றி பார்க்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு கீழே இறக்குகிறார். இப்படி திடீர் விசிட் அடித்தது திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் என்பதை தாமதமாக அறிந்த நடத்துனர்களும், ஓட்டுநர்களும் அப்படியே ஆடிப்போனார்கள்.
Recommended Video
திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மன்னார்குடி பேருந்து நிலையத்திற்குள் வந்து தமிழக அரசின் தளர்வுகளின் படி பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பதை அதிரடியாக ஆய்வு செய்தார். இதனால் நேற்று பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் பல்வேறு மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் முடித்துவிட்டு வந்த இளம் தலைமுறையினர் மாவட்ட ஆட்சியர்களாக நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேரடியாக ஐஏஎஸ் முடித்த இளம் வயதினரே மாவட்ட ஆட்சியர்களாக இப்போது இருக்கிறார்கள். அதேநேரம் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பல்வேறு துறைகளின் நிர்வாகிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள்.

இணையத்தில் வைரல்
திருவாரூர் மாவட்ட ஆட்சியார் வே.சாந்தா மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக காயத்ரி கிருஷ்ணன் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் நியமிக்கப்பட்டார். திருவாரூர் மாவட்ட ஆட்சியராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி காயத்ரி கிருஷ்ணன் இணையத்தில் அப்போதே பேமஸ் ஆனார். பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் பேசுபொருளாக திகழ்ந்தார்,

திறமையானவர்
ஏன் பேமஸ் ஆனார். மிகவும் அழகான அதிகாரி அத்துடன் மிகவும் திறமையான, துடிப்பான ஐஏஎஸ் அதிகாரி என்பதால் காயத்ரி கிருஷ்ணனின் படத்தை நெட்டிசன்கள் பலர் பகிர்ந்து வைரலாக்கினர். இவர் கோவையில் வணிகவரித்துறை (மாநில வரிகள்) மாவட்ட இணை ஆணையராகப் பதவி வகித்த காயத்ரி கிருஷ்ணன் மாற்றப்பட்டு, திருவாரூருக்கு கடந்த மாதம் வந்தார்.

சாலை அமைத்தல்
இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியராக இருந்த போது மக்களிடம் அதிக நெருக்கமாக பழகினார்,. பொள்ளாச்சியில் மரங்களை வெட்டாமல் சாலை போடும் திட்டத்திற்காக, மரங்களை வேறு இடங்களுக்கு அப்படியே மாற்றும் திட்டத்தை கொண்டு வந்தார். நேரடியாக மக்களிடம் உதவி கேட்டு, பல்வேறு இளைஞர்கள் அமைப்பின் மூலம், மரங்களை வெட்டாமல் சாலை அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.

என்ன செய்தார்
கோவையிலும் வணிகவரித்துறை இணை இயக்குனராக கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டார். இதனை கவனித்த திமுக அரசு திருவாரூர் ஆட்சியராக கடந்த மாதம் நியமித்தது. திருவாரூர் மாவட்டத்தில் ஆட்சியராக பதவியேற்ற முதல் மக்களின் கோரிக்கைகளை உடனே கவனத்தில் எடுத்து செயல்படுத்தி வருகிறார்.

மன்னார்குடி பேருந்து நிலையம்
கொரோனா தொற்று பரவல் காலமாக இருந்தபோதிலும் திருவாரூர் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் தொய்வின்றி சிறப்பாக நடைபெற வேண்டும் என்று அடிக்கடி ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மன்னார்குடி பேருந்து நிலையத்திற்குள் நேற்று வந்தார். தமிழக அரசின் தளர்வுகளின் படி பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பதை அதிரடியாக பேருந்துகளில் ஏறி ஆய்வு செய்தார். இதனால் நேற்று பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications