திருவாரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தனலட்சுமியின் நள்ளிரவு அலறல்.. 15 வயது சிறுவனின் கொடூரம்.. காரணமே மாமியார்தான்..!

மருமகளை கொன்ற மாமியார் உட்பட 4 பேர் கைதாகி உள்ளார்கள்

Google Oneindia Tamil News

திருவாரூர்: குழந்தை இல்லை என்ற காரணத்துக்காக, ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து மருமகளை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.. முத்துப்பேட்டை அடுத்துள்ளது கழுவங்காடு என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் மகேந்திரன்.. இவர் பந்தல், வாடகை பாத்திரம் கடை வைத்திருக்கிறார்.

சிறிய மற்றும் பெரிய என்று 2 வீடுகள் மகேந்திரனுக்கு உள்ளது.. இதில் சிறிய வீட்டில் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்..

சென்னையில் 20 நாளில் 18 கொலை.. பத்திரிக்கை கருத்தை முடக்குவதில்தான் முதல்வர் கவனம் உள்ளது: எடப்பாடிசென்னையில் 20 நாளில் 18 கொலை.. பத்திரிக்கை கருத்தை முடக்குவதில்தான் முதல்வர் கவனம் உள்ளது: எடப்பாடி

தனலட்சுமி

தனலட்சுமி

மனைவி பெயர் தனலட்சுமி.. 35 வயதாகிறது.. பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சியை சேர்ந்தவர்.. இவர்களுக்கு 2012ல் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், இன்னும் குழந்தை இல்லை. குழந்தை இல்லாமல் இருப்பதால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு, மனஸ்தாபம், வெடித்துள்ளது.. இதனால் தம்பதி இருவருமே மனநிம்மதி இல்லாமல் இருந்திருக்கிறார்கள்.. இந்நிலையில் சம்பவத்தன்று, மகேந்திரன் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றுவிட்டார்..

 நாத்தனார்

நாத்தனார்

அன்றைய தினம் தனலட்சுமி சிறிய வீட்டில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறார்.. பெரிய வீட்டில், 75 வயதான மாமியார் ரஞ்சிதம், நாத்தனார் மகன்களும் தூங்கி இருக்கிறார்கள்... ஆனால், மறுநாள் காலை, நீண்ட நேரம் ஆகியும் தனலட்சுமி வெளியே வரவில்லை.. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது தனலட்சுமி ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்திருக்கிறார்.. இந்த தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் விரைந்து வந்து தனலட்சுமி உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 பேரன் உடந்தை

பேரன் உடந்தை

பிறகு, போலீசார் விசாரணையை துவக்கினர்.. மாமியார் ரஞ்சிதம், கணவர் மகேந்திரன், அவரது சகோதரி மகன்கள் விஜயராமன், விநாயகர் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.. இதில், மொத்த சந்தேகமும் மாமியார் ரஞ்சிதம் மீது குவிந்தது.. அவரிடம் துருவி துருவி கேட்டதற்கு, தனலட்சுமியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.. இந்த கொலைக்கு சொந்த பேரனே, உடந்தையாக இருந்திருக்கிறார்... சொத்தை பிரித்து தர சொல்லி தனலட்சுமி கேட்டு வந்தாராம்..

மருமகள்

மருமகள்

குழந்தை இல்லாத உனக்கு சொத்து எதற்கு? என்று கேட்டு மாமியார் ரஞ்சிதம் சத்தம் போட்டதாகவும், இதனால் ஏற்பட்ட மோதலில் பேரனுடன் சேர்ந்து மருமகளை அடித்து கொன்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்... வாக்குமூலத்தில் ரஞ்சிதம் சொல்லும்போது, "மருமகளுக்கு 10 வருடமாக குழந்தை இல்லை.. புருஷன் - பொண்டாட்டிக்கு அடிக்கடி தகராறு வரும்.. நானும் குழந்தை விஷயத்தை வைத்து சண்டை போடுவேன்.. அப்படித்தான் அன்னைக்கு ராத்திரியும் சண்டை வந்தது.. அப்பறம் தனலட்சுமி தூங்க போயாச்சு.. எனக்குதான் ஆத்திரம் தீரவே இல்லை..

 குத்தி குத்தி கொன்றேன்

குத்தி குத்தி கொன்றேன்

மகன் வெளியூர் சென்றதால், அந்த நேரத்தை பயன்படுத்தி கொண்டேன்.. அதனால், தூங்கிக்கொண்டிருந்த தனலட்சுமி தலையில் இருந்து இரும்பு கம்பியால் அடித்தேன்.. வலி தாங்க முடியாமல் தனலட்சுமி அலறவும், அவர் வாயை என் 2வது பேரன் மூடினான்.. அவனுக்கு 15 வயசாகிறது.. அவன் உதவியால்தான், ஆணி போன்ற இரும்பு பொருள் ஒன்றை எடுத்து, தனலட்சுமி முகத்தில் கோபம் தீரும்வரை குத்தி குத்தி கொன்றேன்" என்று அதிர்ச்சி வாக்குமூலம் தந்தார்.

 நாத்தனார்கள்

நாத்தனார்கள்

இதையடுத்து, முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சிதத்தையும், கொலைக்கு உடந்தையாக இருந்த 15 வயது சிறுவனையும் கைது செய்தனர். மேலும் வரதட்சணை கொடுமை செய்து கொலைக்கு தூண்டியதாக தனலட்சுமியின் கணவர் மகேந்திரன் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.. ஆனால், 2 நாத்தனார்களும் எஸ்கேப் ஆகி விட்டனர்.. ரமணிதேவி 42 வயது, கலாதேவி 44 வயது.. இவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்... குழந்தை இல்லாததால் மருமகளை, ஒரு குடும்பமே சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
what happened in tiruvarur and why did police arrest four people in the same family மருமகளை கொன்ற மாமியார் உட்பட 4 பேர் கைதாகி உள்ளார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X