திருப்பதி அருகே பயங்கர விபத்து! கன்டெய்னர் லாரியும் காரும் மோதல்! தமிழர்கள் 5 பேர் பலி!
திருப்பதி: திருப்பதி அருகே நடந்த விபத்தில் சிக்கி ஓசூரை சேர்ந்த 5 பேர் பலியாகிவிட்டனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூரை சேர்ந்தவர்கள் காரில் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பதி அருகே பூதலப்பட்டு- நாயுடுப்பேட்டை சாலையில் கன்டெய்னர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.

அப்போது அந்த லாரியின் பின்புறம் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 7 பேரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்டமாக நடந்த விசாரணையில் இறந்தவர்கள் 5 பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
இரு பெண்கள், இரு ஆண்கள், ஒரு சிறுவன் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications