திருப்பதியில் இபிஎஸ் சாமி தரிசனம் .. தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு.. பின்னணி!
திருப்பதி: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் கைகள் ஓங்கியுள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பால், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும். இதனால் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வரும் எடப்பாடி பழனிசாமி, இரு நாட்களுக்கு முன் அதிமுக தலைமை அலுவலகம் வந்தார். இதனால் அதிமுகவில் தனக்கு தான் ஆதரவு அதிகம் என்று தொண்டர்கள் மத்தியில் இபிஎஸ் நிரூபித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் திடீரென திருப்பதியில் சாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார். நேற்றிரவு திருப்பதி வந்த அவர், இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அர்ச்சகர்கள் வேத ஆசி வழங்கினர். இதனைத்தொடர்ந்து தேவஸ்தான் அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கினர். பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த அவர், தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.












Click it and Unblock the Notifications