45 நாட்களில் ரூ.4 கோடி.. வெறும் 10 நாட்களில் ஒரு கோடி.. சாதித்த தக்காளி விவசாயி.. சொன்ன சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: 10 நாட்களில் ஒரு கோடி ரூபாய் உங்களால் சம்பாதிக்க முடியுமா? அதுவும் விவசாயியால் முடியுமா? முடியும் என்று நிரூபித்துள்ளார் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தக்காளி விவசாயி சந்திரமவுலி. இவர் 45 நாட்களில் ரூ.4 கோடி வருமானம் ஈட்டி உள்ளார். கடனானியாக இருந்தவர் இப்போது கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.

தக்காளி விலை கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் ஏறத்தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாகவே தக்காளி விலை தாறுமாறாக விற்பனையாகி வருகிறது. குறிப்பாக கடந்த 30 நாட்களாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் வரவே இல்லை. குறிப்பாக தக்காளி விலை 140 ரூபாயில் இருந்து தற்போது விலை கடுமையாக உயர்ந்து 180 ரூபாய் ஆகி உள்ளது. இதனால் தக்காளி தங்கத்திற்கு நிகரான மதிப்பிற்கு உயர்ந்துள்ளது.

Andhra tomato farmer who earned Rs 4 crore in 45 day, secret he happily shared about his income

தக்காளி விலை இப்படி தாறுமாறாக உயரக் காரணம் என்ன? மே மற்றும் ஜூன் மாதம் வழக்கதை விட அதிகமாக வெயில் மற்றும் பருவ மழை தாமதம் போன்ற காரணங்களால் தக்காளி விலை பாதித்தது. இதுவே தக்காளி விலை உயர காரணம் ஆகும். இதுமட்டும் காரணம் அல்ல, தக்காளிக்கு கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உரிய விலை கிடைக்காத காரணத்தால் பல விவசாயிகள் தக்காளி பயிரிடுவதை நிறுத்தினர்.இதுவும் தக்காளி விலை உயர காரணமாகி உள்ளது. தக்காளி விளைச்சல் பாதிப்பு , போதிய அளவு பயிரிடப்படாதது போன்ற காரணங்களால் இப்போது தக்காளி விலை 200 ரூபாயை தொடப்போகிறது.

விலை இப்படி தாறுமாறாக உயர்ந்த காரணத்தால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயிலை பொருட்படுத்தாமல் தக்காளி பயிரிட்ட விவசாயிகள் அத்தனை பேரும் லட்சாதிபதிகளாகவும், கோடீஸ்வரர்களாகவும் மாறி உள்ளனர். தக்காளியை 10 ஏக்கருக்கு பயிரிட்டு இருந்தால் நிச்சயம் அவர்கள் கோடீஸ்வரர்கள் ஆகி இருப்பார்கள். யாரெல்லாம் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தக்காளி போட்டார்களோ அவர்கள் அத்தனை பேரும் இன்று கோடீஸ்வரர்கள் தான்.

Andhra tomato farmer who earned Rs 4 crore in 45 day, secret he happily shared about his income

அப்படி ஒரு விவசாயி தான் ஆந்திர மாநிலத்தில் கோடீஸ்வரர் ஆகி இருக்கிறார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரமவுலி என்பவருககு தக்காளி விவசாயியான இவருக்கு சொந்தமாக 22 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. இவர் கடநத் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தக்காளியை பயிரிட்டார். விளைச்சல் விரைவாகவும், கணிசமாகவும் கிடைக்கும் வகையில் பல உத்திகளைப் பயன்படுத்தினார்.

பொதுவாக தக்காளி 100 நாளில் அறுவடைக்கு வந்து விடும். அதன் காரணமாகவே தக்காளி விவசாயிகளுக்கு விலை கிடைக்காத நிலை இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி அல்ல.. தக்காளியை சரியான அளவு மக்கள் பயிரியிடவில்லை. அது அதிர்ஷ்டமாக மாறியது சந்திரமெளிலியும் அவரது மனைவியும் சேர்ந்து தக்காளியை வெயிலில் இருந்து கஷ்டப்பட்டு பாதுகாத்தனர்.

ஏனெனில் வெயிலில் தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும். தக்காளியை பாதுகாக்க பல விஷயங்களை செய்தார். கஷ்டப்பட்டு பாதுகாத்து பயிரை அறுவடைக்கு தயார் செய்தார் சந்திரமௌலி. இதன் விளைவாக ஜூன் மாத இறுதியில் சந்திரமவுலியின் நிலத்தில் செடிகளில் தக்காளிகள் காய்த்துக் குலுங்கின.

அவற்றைப் பறித்த சந்திரமௌலி கர்நாடக மாநிலம் கோலார் சந்தைக்கு கொண்டு சென்று விற்றார். 15 கிலோ தக்காளி அடங்கிய ஒரு பெட்டியை ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்தார். இப்படி இவர் 45 நாட்களில் விற்ற தக்காளி பெட்டிகளின் எண்ணிக்கை 40 ஆயிரம்!

Andhra tomato farmer who earned Rs 4 crore in 45 day, secret he happily shared about his income

இதன் மூலம், ரூ.4 கோடி சம்பாதித்திருக்கிறார் சந்திரமவுலி. அதுவும் வெறும் 10 நாட்களில் ஒரு கோடி ரூபாய்க்கு இவரது தக்காளி விற்பனை ஆகி உள்ளது.

உற்பத்தி, பறிப்பதற்கான கூலி, கமிஷன், போக்குவரத்து செலவு எல்லாம் போக சந்திரமௌலிக்கு ரூ.3 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த வருடம் தக்காளி பயிரிட்டதால் ஏற்பட்ட 1.5 கோடி கடனை அடைத்தவர், இப்போது அவரது வீட்டில் அலமாரியில் 2 கோடி ரூபாய் மீதம் உள்ளதாம். இதுவரை 35 முறை அறுவடை செய்துவிட்ட சந்திரமௌலி, இன்னமும் 20 முறை அறுவடை செய்யலாம் என்று கூறுகிறார். எனவே இனி மீதமுள்ள தக்காளியாலும் அவருக்கும் பணம் கொட்ட போவது உறுதி. கடந்த முறை 1.5 கோடி நஷ்டம் அடைந்த போதிலும் இந்த முறை நம்பிக்கையுடன் தக்காளி பயிரிட்டவர் கோடீஸ்வரர் ஆகி உள்ளார்.

விவசாயிகள் பலர் விலை கிடைக்காமல் தவித்து வந்த காலம் மெல்ல மெல்ல மாறி வருகிறது. சின்ன வெங்காயம் போட்ட விவசாயிகள் பலர் நம்ம ஊர் பகுதிளில் கோடீஸ்வரர்கள் ஆகி வருகிறார்கள். ஏனெனில் சின்ன வெங்காயம் விலை 160 ரூபாய்க்கு குறைவாக விற்பனையாகவில்லை. பச்சை மிளகாய் விலையும் அதிகமாகவே உள்ளது. அரிசி விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. எனவே விரைவில் விவசாயம் லாபகரமான தொழில் ஆக மாறும் என்ற நம்பிக்கை உருவாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+