விநாயகர் சதுர்த்தி.. பிள்ளையார் சிலை முன்பு ஆபாச டான்ஸ் ஆடிய இளம்பெண்கள்! பக்தர்கள் ஷாக்
திருப்பதி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சிலைகள் வைத்து வழிபடும் இடங்களில் அன்னதானம் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இப்படி இருக்கையில், திருப்பதியில் விநாயகர் சிலை முன்பு நடந்த ஆபாச நடனம், பக்தர்களை முகம் சுழிக்க வைத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முந்தைய ஆண்டுகளை விட, அடுத்த ஆண்டுகளில் சிலைகளின் டிசைன், சுற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உருவாக்குதல் என, விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மேம்பட்டு வருகிறது. ஆனால், அதேநேரம், சில இடங்களில் இந்த விநாயகர் சதுர்த்தி விழாக்கள் பக்தர்களிடையே முக சுழிப்பை ஏற்படுத்துகின்றன.

அப்படி ஒரு சம்பவம்தான் ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திர மாநிலம் திருப்பதியை ஒட்டியுள்ள சப்தகிரி பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த முறை, கொண்டாட்டங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, விழா ஏற்பாட்டாளர்கள் ரக்கா டான்ஸை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
கோயில் திருவிழாக்களின்போது இப்படியான ஆபாச நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. திருவிழாவின் கடைசி நாளின்போது, பாட்டு கச்சேரி நடத்தப்படும். அப்போது நள்ளிரவு நேரம் கடந்த பின்னர், சைஸாக ஆபாச நடனம் உள்ளே இறக்கப்படும். இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாக்களில் பகிரப்பட்டதையடுத்து காவல்துறை இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
இன்றைய தேதிகளில் கோயில் திருவிழாக்களில் இதுபோன்ற ஆபாச நிகழ்ச்சிகள் நடத்தப்படாதவாறு காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், ஆந்திரப் பிரதேசத்தில் இன்னமும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
சப்தகிரி பகுதியில் நேற்றிரவு இந்த டான்ஸ் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் விநாயகர் சில முன்பு இளம்பெண்களும், இளைஞர்களும் ஆபாச நடனமாடியுள்ளனர். இத தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, ஊர் பொதுமக்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் தற்போது வரை 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
பக்தி என்பது, அவரவரின் தனிப்பட்ட விருப்பம். இப்படி ஈடுபாடு இருப்பவர்கள் சேர்ந்து நிகழ்ச்சிகளை செய்யும் போது பக்தியும், கடவுள் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். ஆனால், விநாயகர் சதுர்த்தி விழக்கள் பக்தி உணர்வுடன் முன்கெடுக்கப்படுவதில்லை என்கிற விமர்சனத்தை சப்தகிரியில் நடந்த சம்பவம் உண்மையாக்கியிருக்கிறது.
பிள்ளையார் சிலை முன்பு, குத்து பாட்டுக்கு அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக ஆடுவதுதான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டமா என்றும் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications