திருப்பதி பிரம்மோற்சவ நாளில் ஏழுமலையானை எத்தனை பேர் தரிசித்தனர் தெரியுமா? உண்டியல் வருமானம் என்ன?
திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்வ தரிசனத்தில் 18 மணி நேரமானதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பின. அதையும் தாண்டி ஆழ்வார் டேங்க் கெஸ்ட் அவுஸ் வரை வரிசை நின்றிருந்தது.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் ஏழுமலையானை தரிசிக்கிறார்கள். மேலும் நேற்று முதல் பிரம்மோற்சவம் தொடங்கியது. இது 9 நாட்களுக்கு அதாவது அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் திருப்பதி பெருமாளை தரிசிக்க 3 மாதங்களுக்கு முன்பு ரூ 300 டிக்கெட்டை புக் செய்வது முக்கியம். இதுதான் தற்போதைய நடைமுறை. ஜனவரி மாதம் திருப்பதிக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் அக்டோபர் 24 ஆம் தேதி அதற்கான புக்கிங் தொடங்கும். அப்போது புக் செய்து கொள்ளலாம். அது போல் தோமலா சேவை, ஆர்ஜித சேவை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட சேவைகளுக்கு புக்கிங் 3 மாதங்களுக்கு முன்பே நடைபெறுகிறது.
இந்த ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை பெற முடியாவிட்டால் தர்ம தரிசனம், திவ்ய தரிசனம் ஆகிய வழிமுறைகளிலும் பெருமாளை தரிசிக்கலாம். இலவச தரிசனத்திற்கு கூண்டிற்குள் அடைய விருப்பமில்லாவிட்டால் கூட்டத்தை பொருத்து குறிப்பிட்ட நேரத்தை டேகில் அச்சிட்டு தேவஸ்தானம் சார்பில் கொடுக்கிறார்கள்.
அதை பெற்றுக் கொண்டு அதில் குறிப்பிட்ட நேரத்தில் வரிசையில் போய் நின்றால் சுவாமியை தரிசிக்கலாம். அது போல் திவ்ய தரிசனம் என்றால் அலிபரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதைகளில் திருமலைக்கு செல்வது. இந்த புரட்டாசி மாதம் அக்டோபர் மாதம் 3ஆம் தேதி எத்தனை பேர் பெருமாளை தரிசித்தனர் என்பதை பார்க்கலாம். நேற்று ஒரு நாளில் 54,866 பேர் பெருமாளை தரிசனம் செய்தனர். 28,657 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 2.60 கோடி கிடைத்துள்ளது. அது போல் டைம் ஸ்லாட் மூலம் சர்வ தரிசன டிக்கெட் வாங்காமல் கூண்டில் அடைப்பட்டு சுவாமி தரிசனம் செய்ய 18 மணி நேரம் ஆனது. ஆழ்வார் பயணியர் தங்கம் விடுதி வரை வரிசை நீண்டிருந்தது. இந்த தகவல்களை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டிருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications