திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சூப்பர் வாய்ப்பு.. வரும் 18ம் தேதியை மிஸ் பண்ணிடாதீங்க
திருப்பதி: உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையானை வழிபட ஆகஸ்டு மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வருகிற 18ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "திருப்பதி ஏழுமலையானை ஆகஸ்டு மாதத்தில் வழிபட, ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வருகிற 18-ந்தேதி காலை 10 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. இந்தச் சேவை டிக்கெட்டுகளை எலக்ட்ரானிக் முறையில் குலுக்கல் செய்வதற்கான ஆன்லைன் பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை செய்யலாம்.

இந்த டிக்கெட்டுகளை பெறுபவர்கள் 20-ந்தேதியில் இருந்து 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் ஒதுக்கப்படும்.
கோவிலில் ஆகஸ்டு மாதம் 15-ந்தேதியில் இருந்து 17-ந்தேதி வரை நடக்கும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகிய டிக்கெட்டுகள் மற்றும் வருடாந்திர பவித்ரோற்சவ சேவை டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.உற்சவர் சேவைகளுக்கான ஒதுக்கீடு 21-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்ட தரிசன டிக்கெட்டுகள் ஒடுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படுபவர்கள் ஆகஸ்டு மாதம் ஏழுமலையானை தரிசிக்க ஏதுவாக இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 23-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும். திருமலை மற்றும் திருப்பதியில் ஆகஸ்டு மாதத்துக்கான அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருமலை-திருப்பதி ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் பக்தர்களுக்கு சேவை செய்வதற்கான ஒதுக்கீடு 27-ந்தேதி காலை 11 மணியளவிலும், நவநீத சேவைக்கு மதியம் 12 மணிக்கும், பரகாமணி சேவைக்கு மதியம் 1 மணியளவிலும் ஆன்லைனில் வெளியிடப்படும். https://ttdevasthanams.ap.gov.in இணையதளம் மூலம் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" இவ்வாறு தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications