Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tirupati: மார்ச் 3 ஆம் தேதி திருப்பதிக்கு போக திட்டமா? 10 மணி நேரம் ஏழுமலையானை தரிசிக்க முடியாது!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: மார்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடைசாத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியைக் ரத்து செய்துள்ளது. இதேபோல், பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரை நடைபெறும் தெப்போற்சவங்கள் காரணமாகவும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் பிப்ரவரி 26 முதல் மார்ச் 2 வரையிலான ஸ்ரீவாரி தெப்போற்சவங்களின் ஏற்பாடுகள் குறித்து திருமலை தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அலுவலர் சி.ஹெச். வெங்கையா சவுதரி ஆய்வு நடத்தினார்.

Tirumala Temple Closed

பத்மாவதி விருந்தினர் மாளிகையில் உள்ள சுதர்மா மாநாட்டு அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தெப்போற்சவங்களில் பக்தர்கள் எந்த சிரமமும் இன்றி பங்கேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

"இந்த மாதத்தின் 23ஆம் தேதி தெப்பங்களின் திறனை சோதிக்க சோதனை ஓட்டம் நடத்தப்படும். புஷ்கரணியில் போதுமான நீர் இருப்பு உறுதி செய்யப்படும். புஷ்கரணி மற்றும் தெப்பங்களுக்கு அழகிய மின் அலங்காரங்கள் செய்யப்படவுள்ளன" என திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், வராக சுவாமி கோயில் மற்றும் நான்கு மாட வீதிகளில் பந்தல்கள் அமைப்பது, பக்தர்களுக்கு வழிகாட்டும் பொது ஒலிபரப்பு அமைப்பு (Public Address System) நிறுவுவது போன்ற ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

பிப்ரவரி 20 முதல் மார்ச் 5 வரை புஷ்கரிணியில் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை. நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளில் தேவையான பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் புஷ்கரிணியில் நீச்சல் வீரர்கள் நியமிக்கப்படுவர்.

தெப்போற்சவங்களின் முக்கியத்துவத்தை பக்தர்கள் அறிந்து கொள்ள பொது ஒலிபரப்பு அமைப்பு மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பாண்டில், தெப்போற்சவத்தையொட்டி பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் சஹஸ்ரதீபாலங்கார சேவையும், பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ரதீபாலங்கார சேவையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும், மார்ச் 3ஆம் தேதி நடைபெறவுள்ள சந்திர கிரகணம் குறித்து கூடுதல் செயல் அலுவலர் ஆலோசனை செய்தார். அன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். கிரகணம் காரணமாக காலை 9 மணிக்கு மேல் அன்ன பிரசாத விநியோகம் இருக்காது. அதற்கேற்ப தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொண்டு திருமலைக்கு வருமாறு திருமலை தேவஸ்தானம் பக்தர்களை அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது.

சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் இரவு 7:30 மணி வரை ஸ்ரீவாரி கோவில் நடை சாத்தப்படும். (சந்திர கிரகணத்தின் உண்மையான நேரம் மதியம் 3:20 மணி முதல் மாலை 6:47 மணி வரை). வைகுண்டம் க்யூ காம்ப்ளெக்ஸ், ராம் பாகிச்சா மற்றும் சி.ஆர்.ஓ மையங்களில் பக்தர்களுக்கு சுமார் 40,000 புளியோதரை பொட்டலங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சந்திர கிரகணம் காரணமாக மார்ச் 3ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அஷ்டதள பாத பத்மராதனா சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதிபாலங்கார சேவை, ஆர்ஜித சேவைகள் மற்றும் விஐபி பிரேக் தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், அன்று ஸ்ரீவாணி தரிசனம், ₹300 சிறப்பு நுழைவு தரிசனம், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், நன்கொடையாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான தரிசனங்களும் ரத்து செய்யப்படுவதாக திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+