திருப்பூரில் சத்துணவு சமையலருக்கு தீண்டாமை! 6 பேருக்கு சிறை தண்டனை! வழக்கின் முழு விவரம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் சத்துணவு சமையலராக பணியாற்றி வந்தவருக்கு தீண்டாமை கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கை விசாரித்து வந்த நீதிமன்றம் 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி திருமலைக்கவுண்டன் பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று அமைந்திருக்கிறது. இந்த பள்ளியில் சத்துணவு சமையலராக பணியாற்றிய அதே ஊரை சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த பாப்பாள் தீண்டாமை கொடுமையை எதிர்கொண்டிருக்கிறார்.

புகாரும் வழக்கும்
கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த பள்ளியில் பாப்பாள் வழக்கம் போல சமையல் பணியை மேற்கொண்டு இருந்தார். ஆனால், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களின் பெற்றோர்கள் சிலர், பாப்பாள் சமைத்த உணவை தங்களது குழந்தைக்கு கொடுக்கக் கூடாது என்று கூறி போராட்டம் நடத்தினர். இது பெரும் விவாதமாக வெடித்த நிலையில், பாபாளுக்கு ஆதரவாக பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் எதிர் போராட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக சேவூர் காவல் நிலையத்தில் சமையலர் பாப்பாள் புகார் அளித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் 36 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு திருப்பூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை 70க்கும் மேல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த 28ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்து இருந்தார்.
அதன்படி சுரேஷ், பழனிசாமி கவுண்டர், சக்திவேல், சீதாலட்சுமி, சண்முகம், வெள்ளியங்கிரி மற்றும் துரைசாமி என 6 பேருக்கு 2 ஆண்டு காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
வழக்கின் பின்னணி
இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பாபாளுக்கு வழக்கறிஞராக பணியாற்றி ப.பா.மோகன் கூறுகையில், "திருமலைக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்த பழனிசாமி மனைவி பாப்பாள் கடந்த 2006 ஆம் ஆண்டு சத்துணவு சமையலராக அரசு ஊழியராக நியமிக்கப்பட்டார். ஆனால், அன்றைய காலத்தில் திருமலைக்கவுண்டன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணியை தொடங்க முயன்ற போது, அங்குள்ள ஆதிக்க சாதி சமூகத்தினரால் விரட்டப்பட்டார். பல்வேறு மாவட்டங்களுக்கு மாற்றல் வாங்கி சென்ற பார்ப்பாள், மீண்டும் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பள்ளிக்கு வந்தார். உயர்நிலைப் பள்ளியில் இருந்த மதிய உணவு சமையலர் ஓய்வு பெற்ற காரணத்தினால் இந்த பள்ளிக்கு அவர் மாற்றப்பட்டிருந்தார்.
அவிநாசி அரசு பள்ளி சமையலர் தீண்டாமை வன்கொடுமை வழக்கு: சாதி ஆதிக்க குற்றவாளிகளுக்கு 6 ஆண்டுகள் தண்டனை. - தோழர் ப.பா.மோகன், மூத்த வழக்கறிஞர் #tiruppur #untochability pic.twitter.com/r8vdmV9qhb
— CPIM Tamilnadu (@tncpim) November 29, 2025
பழனிசாமி கவுண்டர்
ஆனால் பழனிசாமி கவுண்டர் தலைமையிலான ஆதிக்க சாதியை சேர்ந்த மக்கள், திட்டமிட்டு தீண்டாமை வன்கொடுமையை செய்திருக்கின்றனர். பாப்பாள் பள்ளிக்குள் நுழைவதை தடுக்க கேட்டை பூட்டி இருக்கிறார்கள். இந்த வன்கொடுமையை தடுக்க வேண்டிய காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எனவே தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர், ஆதி தமிழர் பேரவை அமைப்பினர் இதற்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டனர்.
உயர் அதிகாரி
இந்த வழக்கில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் சமையலர் பாப்பாளுக்கு மேல் அதிகாரியாக இருந்த மீனாட்சி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முன்வராமல், மீண்டும் பாப்பாளை வேறொரு பகுதிக்கு மாற்றல் செய்ய முயன்றார் என்பதுதான். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, முறையாக விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே A-36ஆக குற்றம்சாட்டப்பட்டிருந்த உயர் அதிகாரி (BDO) மீனாட்சி, உயர்நீதிமன்றத்திற்கு சென்று தன்னை இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துக் கொண்டார்.
ஆதிக்க சாதியினர் நடத்திய போராட்டத்தால் சமையலர் பாப்பாளை பணியிடமாற்றம் செய்த மீனாட்சி மீதும் முறையான விசாணை மேற்கொள்ளாத காவல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தீர்ப்பு
இதனையடுத்து வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, வழக்கறிஞர் பாண்டியன் இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக இணைந்தார். அவருக்கு உதவியாக நான் பணியாற்றினேன். தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் மட்டும்தான் சிறப்பு வழக்கறிஞரையும், தன் சார்பில் ஒரு வழக்கறிஞரையும் பாதிக்கப்பட்டவர் வைத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் சிறப்பு வழக்கறிஞராக பாண்டியன் இணைந்து பணியாற்றினார். பாப்பாள் சார்பில் நான் வழக்காடினேன்.
இந்த வழக்கில் மற்றொரு அம்சம் என்னவெனில் ஆசிரியர்களே பிறழ் சாட்சியாக மாறினார்கள். அரசு, காவல்துறை தரப்பில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 35 பேரில் 4 பேர் உயிரிழந்து விட்டார்கள். மீதம் இருந்தவர்களின் பழனிசாமி கவுண்டர் முக்கிய குற்றவாளியாகவும்(A-1) சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி, சீதாலட்சுமி (சண்முகத்தின் மனைவி) இவர்களை குற்றவாளி என்று தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர்" என்று கூறியுள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications