21 வயசுதான் ஆகிறது.. 8 மாத கர்ப்பிணி வேற.. கணவனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி காரியம்.. ஷாக்..!

கணவனுடன் சேர்ந்து கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: 8 மாத கர்ப்பிணி கணவருடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    திருப்பூர்: கர்ப்பிணி மனைவி, கணவர் தூக்கிட்டு தற்கொலை.. காரணம் என்ன? விசாரிக்கும் போலீசார்..!

    கரூரை சேர்ந்தவர் பாலமுருகன்.. 31 வயதாகிறது.. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே மீனாட்சி நகரில் வசித்து வருகிறார்.. அங்கேயே ஒரு பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் கவிதா.. பெருந்துறையை சேர்ந்தவர்.. (21) வயதாகிறது.. கல்யாணம் ஆகி இரண்டரை வருடமாகிறது.. இப்போது கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    8 Month pregnant woman commits suicide with husband near Tirupur

    பாலமுருகனின் அண்ணன் கார்த்திகேயனும், இதே பெருமாநல்லூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு பாலமுருகனுக்கு கார்த்திகேயேன் போன் செய்துள்ளார்.. ஆனால், அவர் எடுக்கவில்லை.. இதனால் சந்தேகமடைந்த கார்த்திகேயன் பாலமுருகன் வீட்டிற்கு வந்துள்ளார்.. அப்போது கதவு சாத்தப்பட்டு இருக்கவும், உள்ளே திறந்து கொண்டு சென்றார்.

    அப்போது, பாலமுருகன் - கவிதா 2 பேருமே தூக்கில் தொங்கி கொண்டு இருந்ததை கண்டு அலறினார்.. பின்னர், உடனடியாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்... போலீசாரும் விரைந்து தம்பதியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர். பிறகு, அந்தரூமில் சோதனை நடத்தியபோது, தற்கொலைக்கு முன்பு இருவரும் எழுதி வைத்த கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், "தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணமில்லை... இந்த முடிவை நாங்களே எடுத்துக்கொண்டோம்... அம்மா, அப்பா, 2 பேரும் எங்களை மன்னித்து விடுங்கள்.. உண்டியல் பணத்தை அண்ணனிடம் தந்துவிடுங்கள்" என்று எழுதப்பட்டிருந்தது. இதையடுத்து, கவிதாவின் தந்தை சண்முகம் (அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளர்.. ஒருவேளை அதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் இருவரும் தற்கொலை செய்து கொண்டனரா அல்லது வேறு ஏதாவது காரணமாக என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 8 மாத கர்ப்பிணி தனது கணவருடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+