ரூம்ல அடைச்சு வச்சு.. ப்ளீஸ் என்ன காப்பாத்துங்க! வீடியோவில் கதறிய பெண்! என்னாச்சு? பதறிய திருப்பூர்!
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தி வந்த பிரவீனா என்பவர் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தன்னை காப்பாற்றுமாறு அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பிரவீனா. பல்லடம் மங்கலம் சாலையில் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரவீனா காணாமல் போனதாக பல்லடம் காவல் நிலையத்தில் அவரின் தாயார் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரின் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். மேலும் காணாமல் போனதாக கூறப்படும் பிரவீனாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்

இளம்பெண் மாயம்
இந்த நிலையில் பிரவீனாவை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் பிரவீனாவின் கண்ணீருடன் பேசி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேலும் வீடியோவில் பேசும் பிரவீனா பல்லடத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரிடம் இருந்து தன்னை காப்பாற்றுமாறு அழுது கொண்டே பேசுகிறார்.

கடத்தல்
மேலும் கோடிக்கணக்கில் தன்னை பயன்படுத்தி கடன் பெற்றுள்ளதாகவும் எதற்காக கையெழுத்து போட்டேன் என தனக்கே தெரியாது எனவும் வீடியோவில் தெரிவித்துள்ளார். சிவக்குமார் என்பவர் இதுவரை தன்னிடம் ஒன்றரை கோடி எனது பெயரில் கடன் பெற்று ஏமாற்றியதாக கூறியுள்ளார்.

சித்திரவதை
ஒரு கட்டத்தில் சிவக்குமாருடன் பணத்தை திருப்பித் தருமாறு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சிவகுமார் பணத்தை திருப்பித் தருகிறேன் திருச்சிக்கு வா என அழைத்தார். எப்படியும் பணத்தை பெற்று விடலாம் என்ற நம்பிக்கையுடன் திருச்சிக்கு சென்ற போது என்னை அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து பத்து நாட்களாக சித்தரவதை செய்து வருகிறார்.

அதிர்ச்சி
இவரிடம் இருந்து என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரவீனா. இந்த வைரல் வீடியோவால் பல்வேறு சந்தேகங்கள் காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் எழுந்துள்ளது. இவர் தான் இந்த வீடியோவை வெளியிட்டாரா அல்லது சிவக்குமார் இந்த வீடியோவை வெளியிட்டாரா உண்மையிலேயே பிரவீனா கடத்தப்பட்டாரா சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் சந்தேகம் எழுந்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications