Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.32 லட்சம் பறிமுதல்.. திருப்பூர் பாஜக நிர்வாகி வீட்டில் அதிமுக வேட்பாளரின் பணம்.. போனது எப்படி?

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் பாஜக நிர்வாகி ஜவஹர் வீட்டில் பதுக்கப்பட்ட ரூ.32 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம் ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாருக்கு சொந்தமானது என கூறப்படும் நிலையில் பணம் எப்படி பாஜக நிர்வாகி ஜவஹர் வீட்டுக்கு வந்தது என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை தடுக்க பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADMK Candidate Ashok Kumar money Rs 32 lakhs seized by flying squad in Tiruppur BJP administrator house


தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. இதனால் இரவு, பகலாக பறக்கும் படையினர் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் தேர்தல் பறக்கும் படையினர் இன்று திருப்பூரில் பாஜக நிர்வாகியின் வீட்டில் திடீரென்று அதிரடி சோதனை நடத்தி கட்டுக்கட்டாக லட்சக்கணக்கில் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

அதாவது திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தீத்தம்பாளையம் பகுதியில் பாஜக நிர்வாகி ஜவஹர் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் தான் இன்று தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு வழங்க பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக புகாரை தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. வீட்டில் அனைத்து இடங்களிலும் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கட்டுக்கட்டாக அவரது வீட்டில் இருந்த பணம் சிக்கியது. அதனை கைப்பற்றி பறக்கும் படையினர் எண்ணிப்பார்த்தபோது ரூ.32 லட்சம் இருப்பது தெரியவந்தது. மேலும் பணத்துக்கான எந்த ஆவணமும் அங்கு இல்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கொண்டனர்.

மேலும் இதுபற்றி தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணையை மேற்கொண்டனர். முதற்கட்ட தகவலின்படி அந்த பணம் என்பது ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாருக்கு சொந்தமானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளையில் ஈரோடு அதிமுக வேட்பாளரின் பணம் எப்படி திருப்பூர் மாவட்ட பாஜக நிர்வாகி வீட்டில் உள்ளது? என்ற சந்தேகம் எழுந்தது.

சென்னையில் 400 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்.. தேர்தல் பறக்கும் படை அதிரடி.. பரபர தகவல்


அதாவது ஈரோடு அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் நிழல்கள் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டறையில் பொறுப்பாளராக ஜவஹர் குமார் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமார் திருப்பூர் பாஜக எம்எல்ஏ சரஸ்வதியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+