யார் வம்புக்கும் போறதில்ல..தும்புக்கு போறதில்ல! தான் உண்டு துப்பாக்கி உண்டுனு AK! திருப்பூரில் மாஸ்!
திருப்பூர்: கார் ரேஸில் வெற்றிக் கொட்டி நாட்டியதைத் தொடர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் குமார் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ஏகேவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சினிமாவில் கூட எவ்வித சர்ச்சையிலும் சிக்காத அஜித்குமார், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என தன் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வதாக கூறுகின்றனர் அவரது ரசிகர்கள்.
நடிகர் அஜித்குமார் சினிமாவை தாண்டி கார் ரேஸ், போட்டோ கிராபி, துப்பாக்கி சுடுதல் என பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்தி வருகிறார்.. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த போதிலும், சினிமாவில் நடிப்பதற்கு இடையில், ரேஸுக்கென நேரம் ஒதுக்கி, அதில் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில்தான் துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் தகுதிச்சுற்றில் பங்கேற்ற அஜித்குமார் ரேஸிங் அணி, 7வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து 992 பிரிவு கார் பந்தயத்தில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்த அஜித்குமார் ரேஸிங் அணி இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்தது.

அஜித் குமார்
அதனைத் தொடர்ந்து போர்ச்சுக்கல், ஜெர்மனியில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொண்டிருந்தார் அஜித். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ளகோவில் பகுதியில் கொங்கு நாடு ரைஃபில் கிளப் என்ற பெயரில் துப்பாக்கி சூடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மூன்று இடங்களில் கிளை உள்ள நிலையில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலில் உள்ள இந்த கிளைக்கு வருகை தந்தார் நடிகர் அஜித்குமார்.
கொங்கு நாடு ரைஃபிள் கிளப்
அங்கு உள்ள வசதிகளை பார்வையிட்டு துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த வீடியோவை அவரது உதவியாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த வீடியோ தற்பொழுது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் அஜித் கடந்த 2022 ஜூலை 27ஆம் தேதி அன்று திருச்சியில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று, 4 தங்கம் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#AjithKumar in complete #FocusMode at #KongunaduRifleClub 🔥#PrecisionShot 🎯 #InAction #RiflePractice #AK #AjithKumar #AK #FocusMode pic.twitter.com/2wCclpQhHI
— Suresh Chandra (@SureshChandraa) October 26, 2025
ஏகே ரசிகர்கள்
கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல் என பிஸியாக இருந்தாலும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதையும் அஜித் குமார் வழக்கமாக வைத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட குடும்பத்துடன் அவர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. மேலும் தனது அடுத்த படம் குறித்த விவாதத்திலும் அஜித் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
புஷ்கர் காயத்ரி
கடைசியாக அவர் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஏகே 64 படத்தின் இயக்குனர் யார் என்பதை அஜித் முடிவு செய்து விட்டதாகவும், விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி அல்லது பிரசாந்த் நீல் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கலாம் என சொல்லப்படுகிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications