5 பேரின் உயிரை பறித்த திருப்பூர் சாலை விபத்து.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.. நிதியுதவி அறிவிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இன்று கார்-டேங்கர் லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலியான நிலையில் அவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மணக்கடவு எனும் இடத்தில் இன்று மாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரும், எதிரே வந்த டேங்கர் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன.

இதில் காரில் பயணித்தவர்களில் சம்பவ இடத்தில் 4 பேரும், மருத்துவமனையில் ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு காரில் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்நிலையில் தான் விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தரப்பில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு கிராமம் ஆலங்காட்டு பிரிவு என்ற இடத்தில் இன்று மாலை டேங்கர் லாரியும், நான்கு சக்கர வாகனமும் நேருக்கு நேர் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டது. இதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்த தாராபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 65), அவரது மனைவி செல்வி (50), கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வஞ்சியம்மா நகரை சேர்ந்த தமிழ்மணி (50), அவரது மனைவி சித்ரா (45) ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். மேலும் திண்டுக்கல்லை சேர்ந்த கலாராணி (55)என்பவர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்லையும், ஆறுதலையும் தெரிவித்து கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுளேன்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications